நிலுவையில் உள்ள ₹ 5700 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

நிலுவையில் உள்ள ₹ 5700 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் - ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
அமைச்சர் ஜெயகுமார்
  • News18
  • Last Updated: June 12, 2020, 11:06 PM IST
  • Share this:
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பிட்மென்ட் குழுவின் பரிந்துரைப்படி ஆயத்த ஆடை மற்றும் உரங்கள் மீதான வரியை 5-லிருந்து 12 விழுக்காடாக உயர்த்துவது ஏற்புடையது அல்ல என்றார்.

ஜவ்வரிசி, ஊறுகாய், வெண்ணெய், ஜவுளித் தொழிலில் பயன்படுத்தப்படும் இயந்திர பாகங்கள், பம்ப் செட், பேக்கரி பொருட்கள், பட்டு நூல், சரிகை, தேங்காய் நார் பொருட்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான சேவைகளுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை 5 ஆயிரத்து 700 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading