முகப்பு /செய்தி /வணிகம் / ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்யான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

  • Last Updated :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்யான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

இக்கூட்டத்தில், ஜவுளிகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு ஒத்திவைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வரும் 2022 ஜனவரி 1ம் தேதி முதல் ஜவுளிகள், காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போதைய 5% வரிவிதிப்பு ஸ்லாப்பில் இருந்து 12% ஆக உயர்த்த ஏற்கனவே முடிவாகி இருந்தது. இதனிடையே, மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக மாநில நிதியமைச்சர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜவுளிகள் மீதான வரி உயர்வுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

top videos

    இதனை கருத்தில் கொண்டு இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில், தற்போதைய அளவில் ஜவுளி மீதான வரி உயர்வு முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    First published:

    Tags: GST, GST council, Nirmala Sitharaman