6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது ஜி.எஸ்.டி வரி வருவாய்..

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிடைத்த வருவாயுடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 4 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருப்பது, கொரோனா அச்சம் ஊரடங்கு காரணமாக சுணங்கி இருந்த தொழில்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருவதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது ஜி.எஸ்.டி வரி வருவாய்..
ஜிஎஸ்டி
  • News18
  • Last Updated: October 2, 2020, 12:21 PM IST
  • Share this:
6 மாதங்களுக்கு பிறகு ஜிஎஸ்டி வரி வருவாய் 4% உயர்ந்து, 95,480 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஜிஎஸ்டி 17,741 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 23,131 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 47,484 கோடியாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 21,260 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 16,997 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிடைத்த வருவாயுடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 4 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் உயர்ந்திருப்பது, கொரோனா அச்சம் ஊரடங்கு காரணமாக சுணங்கி இருந்த தொழில்துறை மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருவதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Also read... Gold Rate | தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

இதேபோன்று, இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஏற்றுமதி 5.3 உயர்ந்துள்ளது. ரயில்வேயில் சரக்கு கையாளுதல் 15.3 புள்ளி உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரயில்வேயின் வருமானம் 13.5% விழுக்காடு உயர்ந்துள்ளது. இதேபோன்று பெட்ரோல், டீசல் நுகர்வும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 2% உயர்ந்துள்ளது.
First published: October 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading