Home /News /business /

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்!

GST

GST

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

2022 நிதியாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் என்பது ரூ.1.23 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டுகளின் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூலை கணக்கீடு செய்கையில் 30.5 சதவீதம் அதிகமாகும்.

ஜிஸ்டி வரி முதன் முதலில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமலுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் வசூல் ஆகியிருக்கும் ரூ.1.42 லட்சம் கோடி தான் இதுவரை இல்லாத அதிகபட்ச வசூலாக இருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் அதிகமாகும். அதுவே 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 45.6 சதவீதம் ஆகும்.

வரி வசூல் அதிகரித்தது எப்படி?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பு முயற்சிகளை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் இதில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. 2022ஆம் நிதியாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் 1.23 லட்சம் கோடியாக உள்ளது.

முன்னதாக, கடந்த 2019 - 20 நிதியாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் என்பது ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக 2020 - 21 நிதியாண்டில் இந்த வசூல் என்பது 9.5 சதவீதம் குறைந்து சராசரி மாதாந்திர வருவாய் என்பது ரூ.94,733 கோடி ஆக பதிவானது.

மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் :

வரி வசூல் அதிகரித்திருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது என்பதுடன் வரி ஏய்ப்பு முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போலியான ரசீதுகள் சமர்ப்பிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.

Also read... Gold Rate: சற்று குறைந்தது தங்கத்தின் விலை... இன்று (ஏப்ரல் 02. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

இது மட்டுமல்லாமல், வரி விதிப்பு முறையை சீரானதாக இருக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவும் வரி வசூல் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இ-வே வழியில் உருவாக்கப்பட்ட பில்கள் ரூ.6.91 கோடி ஆகும். இது முந்தைய மாதத்தில் உருவான ரூ.6.88 கோடி பில்களை காட்டிலும் கூடுதலாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஆர்ஏ அமைப்பின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அதிதீ நாயர் இதுகுறித்து கூறுகையில், “மிக அதிகமான ஜிஎஸ்டி வசூல், சுங்க வரி வசூல் அதிகரிப்பு மற்றும் நேரடி வரி வசூல் போன்றவற்றின் மூலமாக 2022 நிதியாண்டில் இந்திய அரசின் வருவாய் என்பது நன்றாக உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: GST

அடுத்த செய்தி