பல விதமான பொருட்களை வாங்குவதற்கு, சேவைகள் பயன்படுத்தட்ட என்று பலவற்றுக்கும் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் உள்ளன. பெர்சனல் லோன், ஹோம் லோன் என்ற கடன்கள் தவிர்த்து, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன. அதைத் தவிர்த்து, கைமாற்றாக சிறிய தொகையை ‘பே லேட்டர்’ என்று சில சிறிய நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை என்று குறிப்பிட்ட கால அளவில் இந்த பே லேட்டர் சேவைகள் நிதி உதவி அளிக்கின்றன.
பயணம் செய்வதற்கு குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது காணப்படுகின்றன. அதாவது, travel now, pay later என்று பணம் செலுத்தாமல் பயணம் செல்லலாம் என்பதை டூரிசம் சேவைகள் வழங்கும் நிறுவனங்களே விளம்பரப்படுத்தி வருகின்றன. கடைசி நிமிடத்தில் பணம் இல்லாமல் சுற்றுலா செல்ல முடியாமல் தவிக்கும் நபர்களுக்கு இந்த இறுதி நிமிட நிதி உதவி, உண்மையில் உதவியாக இருக்குமா என்று தெரியவில்லை. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில், உலக அளவில் என்று பல விதமான பெரிய டிராவல் நிறுவனங்கள் உள்ளன. அவை உங்களுக்கான பயண திட்டத்தை வடிவமைப்பது முதல், வீட்டிலிருந்து கிளம்பியதில் இருந்து வீட்டுக்கு திரும்புவது வரை அனைத்து விதமான பயணத் தேவைகளை பேக்கேஜாக வழங்குகின்றன. இந்நிலையில், மேக் மை டிரிப், மற்றும் எக்ஸ்பீடியா போன்ற பயண நிறுவனங்கள் தற்போது வங்கிகள், பேமெண்ட் தளங்கள், நிதி நிறுவனங்கள் போல pay later சேவையைத் தொடங்கியுள்ளன. இந்த சேவையைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தாமல் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
Read More : வட்டியை உயர்த்திய பிரபல வங்கி.. டெபாசிட் செய்ய இதுதான் சரியான நேரம்!
அமேசான் பிளிப்கார்ட் உள்ளிட்ட இகாமர்ஸ் நிறுவனங்கள் வழங்கும் பே லேட்டர் சேவைகளைப் போலவே, இதுவும் ஒரு டிஜிட்டல் கடன் ஆகும். வெக்கேஷன் நவ்-பே லேட்டர் என்ற இந்த சேவை நான்-பேங்கிங் ஃபை னான்ஸ் கம்பெனி மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்கள், வழங்கப்படும் கடனுக்கு 13% வரை 30% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகைக்கு ஏற்றவாறு கடன் திருப்பிச் செலுத்தும் காலம் அமைக்கப்படும், மேலும், அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை கடன் செலுத்தலாம். மாதாந்திர ஈஎம்ஐ மூலம் நீங்கள் பயணத்துக்கான தொகையை திருப்பி செலுத்தலாம். நீங்கள் எப்போது புக்கிங் செய்தீர்களோ அந்த மாதத்தின் அடுத் மாதம் முதல் மாதாந்திர தவணை செலுத்த வேண்டும். அதாவது இதை நீங்கள் ஒரு கடனாக பெறாமல், அதை பயணத்திற்கான புக்கிங் மூலம், நீங்கள் புக்கிங் செய்த பிறகு, பதிவு செய்த அடுத்த மாதத்தில் இருந்து மாதா மாதம் சுற்றுலாவுக்கான தொகையை நீங்கள் செலுத்தலாம்.
இந்த மாதம் உங்களிடம் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்ய நல்லது செல்வதற்கு பணம் இல்லை என்றால் நீங்கள் பணமில்லாமல் இந்த சேவைகளை பயன்படுத்தி முன்பதிவு செய்து சுற்றுலா சென்று வரலாம். அதற்குப் பிறகு அடுத்த மாதம் முதல் மாதாந்திர தவணையாக நீங்கள் செலவு செய்த தொகைக்கு உரிய தொகையை மாதா மாதம் செலுத்தி வரலாம். இதன் மூலம், கையில் பணமில்லை என்றால் கூட, பயணம் செய்யலாம்.
சில பயண சேவை நிறுவனங்கள், பயணம் செய்த தொகையை 15 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தினால், கடனை வட்டியில்லாமல் செலுத்த அனுமதிக்கிறது. மாதா மாதம் தவணையை செலுத்துவதில் தவறினால், 2 முதல் 3 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.