Home /News /business /

தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கிராஜுய்டி தொகை.. முழு விபரம்!

தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கிராஜுய்டி தொகை.. முழு விபரம்!

கிராஜுய்டி தொகை

கிராஜுய்டி தொகை

ஒரு நிறுவனத்தில் பணியாளர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணி செய்திருப்பின் அவர்கள் கிராஜுய்டி பெறத் தகுதியானவர்களாக வருகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    மாத ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு, அவர்களது ஊதிய கட்டமைப்பின்படி கிராஜுய்டி பெற முடியும். இது கிராஜுய்டி செலுத்துதல் சட்டம் 1972இன் கீழ் வருகிறது. கிராஜுய்டி என்பது ஒரு பணியாளர் ஓய்வு பெறும்போது கிடைக்கும் மொத்த தொகை ஆகும். ஒரு பணியாளரின் சேவைகளைப் பாராட்டி, ஓய்வு பெறும் சமயத்தில் பரிசு வழங்கப்படுவதைப் போல இது அமைகிறது.

    ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணியாளர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணி செய்திருப்பின் அவர்கள் கிராஜுய்டி பெறத் தகுதியானவர்களாக வருகின்றனர். இதன்படி பணியாளர் ஓய்வுபெறும் சமயம் அல்லது பணிநீக்கம் செய்யப்படும் சமயத்தில் கிராஜுய்டி தொகை வழங்கப்படுகிறது. ஒருவேளை பணிக் காலத்திலேயே பணியாளர் இறந்து விட்டால், அந்தத் தொகை அவர்களது வாரிசுகளுக்கு சென்று சேரும். வாரிசுதாரர் கிராஜுய்டி தொகையை பெறுவதற்கு பணியாளர் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்பதில்லை. ஓய்வு நேரத்தில் கிடைக்கும் இந்தத் தொகை ஒரு பணியாளரின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

    கிராஜுய்டி பேமெண்ட் மீதான வரி

    வருமான வரிச் சட்ட விதிகளின்படி அரசுப் பணியாளர் மற்றும் அரசு சாரா பணியாளர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் ஓய்வுபெறும் சமயத்தில் பெறும் கிராஜுய்டி தொகைக்கு வரி பிடித்தம் உண்டு.

    இதுகுறித்து வரி தொடர்பான ஆலோசகர்கள் கூறுகையில், “ஊழியர்கள் யாராக இருந்தாலும் பணி ஓய்வு பெறும் சமயத்தில் கிடைக்கும் கிராஜுய்டி தொகைக்கு வரி பிடித்தம் உண்டு. எனினும் ஓய்வுபெறும் சமயத்தில் இறக்கும் ஊழியர்களுக்கான கிராஜுய்டி தொகைக்கு வரி பிடித்தம் 3 பிரிவுகளாக மேற்கொள்ளப்படுகிறது.

    திருமணம் ஆனவர்கள் வருடத்திற்கு ரூ.72,000 பென்சன் பெற முடியும் தெரியுமா?

    அரசு ஊழியர்: மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பாதுகாப்பு துறை பணியாளர்கள் ஆகியோரின் கிராஜுய்டி தொகைக்கு முழு வரி விலக்கு உண்டு.

    கிராஜுய்டி செலுத்துதல் சட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்கள்: பின்வரும் குறைந்தபட்ச மதிப்பு தொகைக்கு வரி விலக்கு உண்டு.

    பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாட்கள் ஊதிய மதிப்பு அல்லது 6 மாதங்களுக்கு மேல் இருப்பின் ஆண்டின் ஒரு பகுதி அல்லது ரூ.20 லட்சம் அல்லது பெற்றுக் கொண்ட அசல் கிராஜுய்டி தொகை. இது அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ ஒதுக்கீடு ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

    இனி கடனுக்கு அதிக வட்டி கட்ட வேண்டும்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல வங்கிகள்!

    கிராஜுய்டி செலுத்துதல் சட்டத்தின் கீழ் வராத பணியாளர்கள்:

    பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் அரை மாத ஊதிய மதிப்பு. இது கடைசி 10 மாதங்களின் சராசரி சம்பளத்தை வைத்து கணக்கீடு செய்யப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Office Work, Pension Plan

    அடுத்த செய்தி