தபால் அலுவலகங்களில் உள்ள கிராம சுமங்கல் யோஜனா திட்டத்தில் மாதந்தோறும் 5,100 ரூபாய் சேமித்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 19 லட்சம் கிடைக்கிறது. அது எப்படி என விரிவாக பார்க்கலாம்..
கொரோனா பெருந்தோற்று, பணவீக்கம் என மாறி, மாறி பிரச்சனைகள் மக்களை பந்தாடி வரும் இந்த சூழ்நிலையில் சேமிப்பு மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. முதலீடு அல்லது சேமிப்பு திட்டங்கள் என வரும் போது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை விட தபால் அலுவலகங்கள் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரக்கூடியவையாக உள்ளன.
இன்றுடன் முடிவடைகிறது.. இனி ஐசிஐசிஐ வங்கியில் இந்த சேமிப்பு திட்டம் கிடையாது!
நீங்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்பை தொடங்குவதற்காக காத்திருக்கிறீர்கள் என்றால் “கிராம சுமங்கல் யோஜனா” பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
கிராம சுமங்கல் யோஜானா என்றால் என்ன?
கிராம சுமங்கல் திட்டம் என்பது தபால் துறையின் கீழ் செயல்படும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் (பாதுகாப்பான சேமிப்பு போன்றது) திட்டமான இது கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக்கூடியதாக விளங்குகிறது. இது கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆயுள் காப்பீட்டோடு, ஃபிக்சட் டெபாசிட் அல்லது தொடர் வைப்புத் தொகையைப் போல பணத்தையும் திரும்ப அளிக்கிறது. கிராம் சுமங்கல் திட்டத்திற்கான அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், நாமினிக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை மற்றும் போனஸின் பலன் கிடைக்கும்.
பாலிசி கால அளவு:
கிராம சுமங்கல் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி என இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. இதில் முதலாவது ஆயுள் காப்பீடு திட்டமாகும், 20 ஆண்டுகால பாலிசியானது, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டமாகும்.
வயது வரம்பு:
20 ஆண்டுகால பாலிசிக்கான நுழைவு வயது 19 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவறான அக்கவுண்டிற்கு பணம் அனுப்பி விட்டீர்களா? 48 மணி நேரத்தில் புகாருக்கு தீர்வு!
15 ஆண்டுகால பாலிசி:
பாலிசிதாரர் 15 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டு பாலிசி திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், பாலிசிதாரருக்கு 6 ஆண்டுகள், 12 ஆண்டுகள் மற்றும் 16 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையில் 20-20 சதவீத பணம் திருப்ப கிடைக்கும். அதேபோல் பாலிசி முதிர்ச்சி அடையும் போது, சம் அஷ்யூர்டு மற்றும் போனஸாக 40 சதவீதம் வழங்கப்படும்.
20 ஆண்டுகால பாலிசி:
பாலிசிதாரர் 20 ஆண்டுகால பாலிசி திட்டமான கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்திருந்தால், 8 ஆண்டுகள், 9 ஆண்டுகள் மற்றும் 12 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையில் 20-20 சதவீத பணம் திருப்ப கிடைக்கும். அதேபோல் பாலிசி முதிர்ச்சி அடையும் போது, மொத்த பணத்துடன் மீதமுள்ள 40 சதவீத பணம் போனஸாக வழங்கப்படும்.தற்போது, இந்திய அஞ்சலகங்களில் ஆயிரம் ரூபாய்க்கு ஆண்டு போனஸ் ரூ.45 வழங்கப்படுகிறது. அதன்படி, 1 லட்ச ரூபாய்க்கான வருடாந்திர போனஸ் ரூ.4500 ஆக இருக்கும்.
ரூ.19 லட்சம் பெறுவது எப்படி?
25 வயதில் பாலிசி வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகும். 15 ஆண்டுகால ஆயுள் காப்பீட்டு பாலிசியை வாங்கினால் மாதம் 6,793 ரூபாயும், 20 ஆண்டு கால கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டை வாங்கினால், மாதம் 5,121 ரூபாயும் பிரீமியமாக செலுத்த வேண்டும்.
இதில், 15 வருட காலத்திற்கான போனஸ் ரூ.6.75 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கான போனஸ் தொகை ரூ.9 லட்சமாக இருக்கும். காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்பதால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக ரூ.16.75 லட்சம் கிடைக்கும். இதுவே 20 ஆண்டு திட்டத்தில் இணைந்த பாலிசிதாரருக்கு முதிர்வின் போது மொத்தமாக ரூ.19 லட்சம் வழங்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India post, Post Office, Savings