Home /News /business /

வங்கி வர்த்தகத்தை கூகுள் பே, ஃபோன் பே அழித்து விடும் : உதய் கோடாக் கவலை

வங்கி வர்த்தகத்தை கூகுள் பே, ஃபோன் பே அழித்து விடும் : உதய் கோடாக் கவலை

விற்பனையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும். : உதய் கோடாக்

விற்பனையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும். : உதய் கோடாக்

விற்பனையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும். : உதய் கோடாக்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வங்கி வர்த்தகத்தை கூகுள் பே, ஃபோன் பே ஆகிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமைப்புகள் அழித்துவிடும் என்று கோடாக் மகேந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடாக் கூறியுள்ளார்.

    இந்தியாவில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் நாட்டில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்யும் முறை உயர்ந்துள்ளது. தேநீர்க்கடையில் டீ வாங்குவது முதல், போன்களுக்கு ரீசார்ஜ், மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தும் வரையில் மக்கள் க்யூ. ஆர். கோடுகள் மூலம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

    இவற்றுக்கு கூகுள் பே, ஃபோன் பே, பே டி.எம். உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதொடர்பான ஆப்களை டவுண்லோட் செய்து, அவற்றை நமது வங்கிக் கணக்குகளுடன் இணைத்து டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்யலாம்.

    Also Read : சர்வதேச அளவில் இந்தியர்களின் தலைமையில் செயல்படும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்!

    இதேபோன்று, இன்னொருவர் வங்கி கணக்கில் பணத்தை போடுவதற்கு இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் உதவிகரமாக உள்ளன. இந்த நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்பாடு தொடர்பாக கோடாக் மகேந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடாக் கூறியதாவது-

    டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை கூகுள் பே மற்றும் ஃபோன் பே என்ற 2 முக்கிய நிறுவனங்கள்தால் அதிக கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. 85 சதவீத பங்குகள் இந்த 2 நிறுவனங்களிடம்தான் இருக்கிறது.

    Also Read : ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

    இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்தாவிட்டால், பாரம்பரியமாக வங்கி தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் பாதிப்பைதான் சந்திக்கும். புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு நாம் செயலாற்ற வேண்டும்.

    வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க, விற்பனையை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Google pay, Phonepe

    அடுத்த செய்தி