இன்னொரு வெங்காய நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசு புதிய யோசனை!

மார்ச்- ஜூலை காலகட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதலிலும் அரசு ஈடுபட முடிவெடுத்துள்ளது.

இன்னொரு வெங்காய நெருக்கடியை தவிர்க்க மத்திய அரசு புதிய யோசனை!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 30, 2019, 5:33 PM IST
  • Share this:
சமீபத்தில் ஏற்பட்ட மாபெரும் வெங்காய நெருக்கடி போல் மற்றொரு நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு 1 லட்சம் டன் வெங்காயங்களை 2020-ல் இருப்பு வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

2019-ம் ஆண்டில் அரசு 56 ஆயிரம் டன் வெங்காயங்களை அவசர உதவிக்காக இருப்பு வைத்திருந்தது. ஆனாலும், நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்தியாவின் ஆஸ்தான உணவுப் பொருளான வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

வரலாறு காணாத விலை உயர்வை பெற்ற வெங்காயம் இன்னும் பல நகரங்களில் கிலோ 100 ரூபாயைவிட்டு இறங்கவில்லை. இதுகுறித்து மத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த விவகாரம் சமீபத்தில் அமைச்சர்கள் குழு சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வரும் ஆண்டில் 1 லட்சம் டன் வெங்காயங்களை இருப்பு வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.


நபார்டு கூட்டுறவு அங்காடியே வழக்கம்போல் அடுத்த ஆண்டும் இருப்பு நிலையை வைத்துக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மார்ச்- ஜூலை காலகட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதலிலும் அரசு ஈடுபட முடிவெடுத்துள்ளது.

மேலும் பார்க்க: 2019-ம் நிதியாண்டில் ₹756.4 கோடி நஷ்டத்தைச் சந்தித்த ஃபுட்பாண்டா..!
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்