வங்கிகளில் பொதுவாகவே அரசு ஊழியர்களுக்கு எளிதில் லோன் கிடைத்துவிடும். இது காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான். தனியார் நிறுவன ஊழியர்களை நம்பி லோன் தர மறுக்கும் சில வங்கிகள் அரசு ஊழியர்கள் என்றால் உடனே ஓகே சொல்லி விடுவார்கள். இங்கு நீங்கள் தெரிந்துகொள்ள போவது வங்கி தரும் சாதாரண லோன்களைப் பற்றி இல்லை.
தமிழக அரசின் கீழ் பணிபுரிந்து வரும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது முன்பணம் வழங்கப்படுகிறது. இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும?
செய்ய வேண்டியது என்ன?
சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியரிடம் இருந்து முதலில் அனுமதி கடிதம் பெற்றால் போதும் அகில இந்திய சேவைப்பிரிவு அதிகாரிகளுக்கு 40 லட்சத்தில் இருந்து 60 லட்ச ரூபாயாக முன்பணமும் இதேபோல் தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்சமாக 25 லட்ச ரூபாயில் இருந்து 40 லட்சமாகவும் முன்பணம் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வீட்டுவசதித் துறை இதற்கான நிதியை வழங்குகிறது.
இதுப்போன்ற தகவல்களை இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் முடிந்தவரை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.