வங்கிக் கடனுக்கு இ.எம்.ஐ. அவகாச காலத்திற்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தள்ளுபடி - மத்திய அரசு

2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுகுறு தொழில் நிறுவன கடன், வீடு, வாகன, தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடனுக்கு இ.எம்.ஐ. அவகாச காலத்திற்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பது தள்ளுபடி - மத்திய அரசு
மாதிரி படம்
  • News18
  • Last Updated: October 3, 2020, 12:39 PM IST
  • Share this:
வங்கிகளில் வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கான தவணைத்தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வங்கிகளீல் வாடிக்கையாளர் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்று வாடிக்கையாளர்கள் தங்கள் இஎம்ஐ தொகையை திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தவணைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆறு மாதங்களுக்கான அசல் மற்றும் வட்டி தொகைக்கு வட்டி விதிக்கப்பட்டது.


இதனால் கடன் தவணை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தை விட மேலும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டது.



Also read... Gold Rate | தொடர் உயர்வுக்கு இடையே குறைந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

வட்டிக்கு வட்டி வசூலிக்கும் இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு மேலும் சுமை கூடும் என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக முன்னாள் மத்திய கணக்குத் தணிக்கை துறைத்தலைவர் ராஜீவ் மெஹ்ரிஷி தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்ற மத்திய அரசு, வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனால் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்கள் சிறுகுறு தொழில் நிறுவன கடன், வீடு, வாகன, தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading