Flash sale: ’ஃப்ளாஷ் சேல்’ கூடாது: மின்னணு வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் மத்திய அரசு!

புதிய பரிந்துரைகள்

மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்கள் தொடர்பாக ரேங்க்களை வெளியிட வேண்டும், இந்த ரேங்க் முறையில் உள்நாட்டு பொருட்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது உட்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

  • Share this:
மின்னணு வர்த்தக விதிகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நாடாக உள்ள இந்தியா, மிகப் பெரிய நுகர்வோராகவும் விளங்குகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இ.காமர்ஸ் எனப்படும் மின்னணு  வர்த்தகம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.  2026ம் ஆண்டில் இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தின் வளர்ச்சி என்பது 200 பில்லியன் டாலாராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்னணு வர்த்தகம் இத்தகைய வளர்ச்சியை பெற்றுள்ள போதிலும் அதற்கான விதிமுறை எதுவும் முறையாக இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு (மின்னணு வர்த்தகம்) விதிகள் 2020ல் மேற்கொள்ள திருத்தகங்கள் தொடர்பாக சில பரிந்துரைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

மின்னணு வர்த்தக தளங்கள் குறிப்பிட்ட பொருட்களை குறிப்பட்ட நேரத்துக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. இது ஃபளாஷ் சேல் என அழைக்கப்படுகிறது. இத்தகைய ஃபளாஷ் சேல்களை தடை செய்ய வேண்டும் என தனது புதிய பரிந்துரையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் இந்தியாவில் செயல்படும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள்  தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (டி.பி.ஐ.ஐ.டி.) கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பொருட்கள் தொடர்பாக ரேங்க்களை வெளியிட வேண்டும், இந்த ரேங்க் முறையில் உள்நாட்டு பொருட்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது உட்பட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: பழைய மொபைல்களுக்கு கிராக்கி: முதலிடம் பிடித்த சியோமி...

நுகர்வோர்களின் குறைகளை தீர்க்க குறைதீர்க்கும் அதிகாரியை மின்னணு வர்த்தக நிறுவனங்கள் நியமிக்க வேண்டும் என்றும் அவர் குறித்த விவரங்களை தளத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அரசு கேட்கும் தகவல்களை 72 மணி நேரத்துக்கு தர வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   இந்த பரிந்துரைகள் தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 6ம் தேதிக்குள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: