தளவாடச் செலவை 12-14 சதவீதத்தில் இருந்து 7-8 சதவீதமாகக் குறைக்க வணிகத் துறை அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசின் முதல்
தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகள் வழங்கும் விழா வியாழனன்று புது தில்லியில் நடந்தது. பியூஷ் கோயல் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் சர்மா ஆகியோர் 12 பிரிவுகளில் விருதுகளை வழங்கினர்.
தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகள் என்பது, புதுமை, பன்முகத்தன்மை மற்றும் செயல்திறனைக் காட்ட முடிந்த நாட்டில் உள்ள பல தளவாட சேவை வழங்குநர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
அதன் முதல் பதிப்பில் 169 உள்ளீடுகள் கொண்டு 12 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.. வருடத்திற்கு ஒரு முறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தகுதியான விண்ணப்பங்களை அடையாளம் கண்டு, வகைப்படுத்தி, விருதுகளுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும். 18 பல்துறை நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் ஸ்கிரீனிங் கமிட்டி மற்றும் 9 மூத்த உயரதிகாரிகளைக் கொண்ட தேசிய நடுவர் குழு இறுதி முடிவுகளை எடுக்கும்.
விருது விழாவில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், உள்கட்டமைப்பு செலவினங்களை ரூ.2.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக விரிவுபடுத்துவது , கதி சக்தி, சாலைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் தளவாடத் துறைமேம்படும் என்று வலியுறுத்தினார்.
கதிசக்தி மூலம் கடைசி மைல் இணைப்பு என்பது எளிதாகிவிட்டது.. கொள்கலன்கள் உற்பத்தி மற்றும் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பது குறித்து அரசு தீவிரமாக யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
COVID-19 தொற்றுநோய்களின் போது தளவாடத் துறை ஆற்றிய பங்கை அவர் பெரிதும் பாராட்டினார். தளவாடத் துறையில் உருவாக்கப்பட்ட நெகிழ்ச்சியான மற்றும் திறமையான விநியோகச் சங்கிலிகள், கோவிட்-19 தொற்றுநோயின் சவால்களை இந்தியா சமாளிக்க உதவியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் காணப்பட்ட வர்த்தகத்தின் வளர்ச்சியை ஆதரித்தது என்றார்.
ஓய்வூதியத்திற்காக இந்தியா ஒதுக்கும் தொகை இவ்வளவா?
தொழில்துறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் திறமையாகவும் மாற்ற ஸ்டார்ட் அப்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதோடு லாஜிஸ்டிக்ஸ் துறையில் MSMEகள் ஆற்றிய பங்கைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தனி விருதுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், அமைச்சர் சோம் பிரகாஷ் ஷர்மா, தொழில்துறை மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு குறைந்த செலவில் உருவாக்கப்படும் தளவாடங்கள் அவசியம். புதிய தொழில்நுட்பங்களின் உள்ளீடும் தேவை என்றார். இத்துறையில் ஈடுபட்டுள்ள மனித வளங்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம் என்றும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.