ஜிஎஸ்டி-க்கு பதிவு செய்த சிறு வணிகர்களுக்கு இன்சூரன்ஸ்?

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

news18
Updated: January 12, 2019, 4:03 PM IST
ஜிஎஸ்டி-க்கு பதிவு செய்த சிறு வணிகர்களுக்கு இன்சூரன்ஸ்?
மாதிரிப் படம்
news18
Updated: January 12, 2019, 4:03 PM IST
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு வருத்தத்தில் உள்ள சிறு வணிகர்களை சமாதானப்படுத்த அண்மையில் வரிவிலக்கை அறிவித்தது. தற்போது கூடுதலாக இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யும் எண்ணத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா போன்ற ஒரு விபத்து காப்பீட்டுத் திட்டத்தை சிறு வணிகர்களுக்கு மத்திய அரசு அளிக்க உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வணிகர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதேபோன்று சிறு வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான அறிவிப்பு 2019 பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்குத் தற்போது ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் ரூ. 2 லட்சம் மதிப்பிலான விபத்து  காப்பீடு வழங்கப்படுகிறது.

சென்ற ஆண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் கடன் அளிக்கக் கூடிய ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு வணிகர்களுக்கு 20 லட்சம் ரூபாயாக இருந்த வரி விலக்கு வரம்பை 40 லட்சம் ரூபாயாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: புதிய உலக சாதனை படைத்த ஜியோ பொங்கல்!

First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்