வேலைக்கு செல்லும் பெண்களாக இருக்கட்டும், சுயதொழில் செய்யும் பெண்களாக இருக்கட்டும் அவர்கள் தொழில் சார்ந்து அடுத்தக்கட்டத்திற்கு நகர, அரசு சார்பில் பல உதவிகள் செய்யப்படுகின்றன. அதே போல் அரசு வங்கிகளும் அவர்களுக்கு கடன் கொடுக்க முன் வருகின்றன. ஆனால் பலரும் இதுக் குறித்த புரிதல்கள் இல்லாமல் இந்த வாய்ப்பை மிஸ் செய்து விடுகின்றனர்.
அதுமட்டுமில்லை, வட்டி அதிகமாக இருக்கும், கடனில் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் மத்திய, மாநில அரசுகள் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு பல உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதை யாரெல்லம் பெற முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
sbi card : வாடிக்கையாளர்கள் அவசியம் இந்த தகவலை தெரிஞ்சு வச்சிக்கோங்க!
உத்யோகினி :
இந்த கடனை பெண்கள் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். விவசாயம் செய்யும் பெண்கள், சிறு, குறு வணிக நிறுவனங்களை நடத்தும் பெண்கள் இந்த கடனை பெற தகுதியுடையவர்கள். 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை உத்யோகினி
திட்டத்தில் கடன் பெறலாம் .
அன்னபூரணா:
கேட்டரிங் துறை சார்ந்த பெண் தொழில் முனைவோர்கள் இந்த கடனை பெற முடியும். மைசூர் மாநில வங்கியில் இந்த கர்டனை பெற்றுக் கொண்டு 36 மாதங்களுக்கு மாத தவணையில் கடனை அடைக்கலாம்.
பிரதான் மந்திரி முத்ரா :
முத்ரா என்ற அமைப்பின் மூலம் இந்த
கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்கள் தங்களது தொழில் முன்னேற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் தொகை பெற்றுக் கொள்ளலாம். பின்பு 11 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தவணையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டு இருக்கா? அப்ப இந்த அப்டேட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது!
சென்ட் கல்யாணி
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்த கடனை அளிக்கிறது. இந்த திட்டத்தில் அதிக பட்ச கடன் தொகை ரூ. 1 கோடி ஆகும். இத்திட்டத்தில் கடனுக்கான செயலாக்க கட்டணம் கிடையாது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு வங்கியை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.