ஆர்பிஐ-யிடமிருந்து நடப்பு நிதியாண்டில் ரூ.90,000 கோடி டிவிடண்ட் எதிர்பார்க்கும் மத்திய அரசு!

ஆர்பிஐ-யிடமிருந்து நடப்பு நிதியாண்டில் ரூ.90,000 கோடி டிவிடண்ட் எதிர்பார்க்கும் மத்திய அரசு!
ஆர்பிஐ
  • News18
  • Last Updated: July 9, 2019, 11:38 AM IST
  • Share this:
நடப்பு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.90,000 கோடி டிவிடண்ட் எதிர்பார்ப்பதாக, இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் எஸ்.சி.கர்க் தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனம் முந்தைய நிதியாண்டில் அடைந்த லாபத்தை தங்களது பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிப்பதே டிவிடண்ட் என அழைக்கப்படுகிறது.

இப்படி இந்திய ரிசர்வ் வங்கி சென்ற நிதியாண்டில் பெற்ற லாபத்திலிருந்து, மத்திய அரசு 90,000 கோடி ரூபாயை எதிபார்க்கிறது என்று இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் எஸ்.சி.கர்க் தெரிவித்துள்ளார்.


இதே போன்று சென்ற நிதியாண்டில் ஆர்பிஐயிடமிருந்து மத்திய அரசு 68,000 கோடி ரூபாய் டிவிடண்ட் பெற்றது. மேலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் 28,000 கோடி ரூபாய் உபரித் தொகையும் பெறப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 3.3 சதவீதம் வரை நிதிபற்றக்குறை இருக்கும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதை சமாளிக்க ஆர்பிஐ, தேசிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து 2019-2020 நிதியாண்டில் 1.60 லட்சம் கோடி ரூபாய் டிவிடண்ட் மற்றும் உபரியை மத்திய் அரசு எதிர்பார்க்கிறது.

Loading...

மேலும் பார்க்க:
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...