Home /News /business /

மீண்டும் பழையப்படி பென்சன்.. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

மீண்டும் பழையப்படி பென்சன்.. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!

பென்சன்

பென்சன்

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியம் ஆகும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சில காலம் வரையிலும் நாடெங்கிலும் நடைமுறையில் இருந்த ஒன்றுதான். ஆனால், மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்த பிறகு, ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டுவிட்டன.

    அதே சமயம், தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    UIDAI : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

    இதற்கிடையே, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வர உள்ளதாக அங்குள்ள மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    பரிசீலனை செய்யும் பஞ்சாப் அரசு :

    தற்போது பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய உள்ளதாக, அங்கு அண்மையில் புதிதாக அமைந்த ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆராயும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார்.

    வேலையில் இருந்து ரிட்டயர்மென்ட் பெறுவதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் செய்திடுங்கள்!

    இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து எங்களது அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன். ஊழியர்களின் நலனை காப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதலாவது மாநிலம் சத்தீஸ்கர்:

    நாட்டிலேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் முதலாவது மாநிலம் சத்தீஸ்கர் ஆகும். அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலமும் இதை செயல்படுத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பரிசீலனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    எப்போது புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது:

    பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. 01.01.2004 தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் (பாதுகாப்பு படையினர் தவிர்த்து) அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியது.

    இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது ஒரு ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பெற்றுக் கொள்ளும் ஓய்வூதியம் ஆகும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது 60 சதவீத பணி முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும். எஞ்சியுள்ள 40 சதவீத தொகையை ஆனுய்டி திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் கிடைக்கும் பலன்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும் அதற்கு உத்தரவாதம் கிடையாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Govt Scheme, Pension Plan

    அடுத்த செய்தி