ஹோம் /நியூஸ் /வணிகம் /

அரசு ஊழியர்களுக்கான எச்சரிக்கை; அடிக்கடி இந்த விஷயத்தை செய்தால் இனி இது தான் நடக்குமாம்!

அரசு ஊழியர்களுக்கான எச்சரிக்கை; அடிக்கடி இந்த விஷயத்தை செய்தால் இனி இது தான் நடக்குமாம்!

மாதிரி படம்

மாதிரி படம்

மத்திய அரசுப்பணி (நடத்தை) விதிகள் , 1964 ன் படி எந்த அரசு ஊழியரும் அல்லது அவர்களது உறவினர்கள் யாரும் செல்வாக்கு பெறக்கூடிய எந்தவொரு முதலீட்டையும் செய்ய அனுமதிப்பதில்லை.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மற்றும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்வது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது தான். ஷேர் மார்க்கெட்டிங்கில் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் இதில் வருமானத்தைப் பெறுகின்றனர். தன்னிடம் உள்ள சிறிய தொகையைக்கூட ஷேர் மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்யும் போது அதிக பணத்தை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப்பழக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

  இதில் ஆபத்தான விஷயங்கள் இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையில் முதலீடு செய்கின்றனர் சில முதலீட்டாளர்கள். குறிப்பாக தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன தொழிலாளர்களுக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இருந்தப்போதும் சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியை வழங்குவதில்லை.

  அதே சமயம் எந்தவொரு அரசாங்க நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசுப் பணி விதிகள் 1964ன் படி சில வரைமுறைகள் உள்ளது. என்னென்ன? பங்குச்சந்தை முதலீடு செய்தால் என்ன விதமானப் பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடும்? என்பது குறித்து இங்கே அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.

  மத்திய அரசுப் பணி ( நடத்தை) விதிகள் 1964 சொல்வது என்ன?

  மத்திய அரசுப்பணி (நடத்தை) விதிகள் , 1964 ன் படி எந்த அரசு ஊழியரும் அல்லது அவர்களது உறவினர்கள் யாரும் செல்வாக்கு பெறக்கூடிய எந்தவொரு முதலீட்டையும் செய்ய அனுமதிப்பதில்லை. குறிப்பாக எந்த அரசாங்க ஊழியரும் ஷேர்கள், ஸ்டாக்ஸ் அல்லது வேறு விதமாக இன்வெஸ்ட்மென்ட்டுகளில் ஸ்பெக்குலேட் செய்யக்கூடாது. ஒருவேளை பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பனை செய்தாலும் இந்த விதியின் கீழ் தண்டனைக்குரியது.

  தற்போது உள்ள சூழலில் பங்குச்சந்தையில் அதிக ஆதாயங்களைப் பெறலாம் என்பதற்காக வர்த்தகத்தில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால் உங்களது வேலையை இது பாதிக்கும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மத்திய அரசு விதிகளைப் பின்பற்றாமல் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தீர்கள் என்றால், உங்களுக்கு அபாரதம் விதிக்கப்படும். இதோடு தவறான செயல்களில் ஈடுபட்டீர்கள் என்று உங்களது பணியை நிறுத்தி வைப்பது முதல் உங்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது வரை நடக்கக்கூடும். ஒருவேளை இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நீங்கள் இதுவரை பணியாற்றியதற்கான எந்தவித பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் எதுவும் நீங்கள் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  குறிப்பாக நீங்கள் பங்குச்சந்தைகளில் தான் முதலீடு செய்யக்கூடாது என்பதைத் தவிர மியூச்சுவல் பண்ட்கள் மற்றும் கடன் பத்திரங்கள் அரசு ஊழியர்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம் எனவும் இதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். மேலும் அரசு ஊழியர்கள் அவ்வப்போது பங்கு தரகர்கள் அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் பதிவு சான்றிதழை பெற்ற பிற நபர்கள் மூலம் முதலீடு செய்யலாம் என்ற நடைமுறையையும் இந்த விதிகள் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Sensex