ஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு!

news18
Updated: July 16, 2019, 4:42 PM IST
ஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு!
20000 ரூபாய்
news18
Updated: July 16, 2019, 4:42 PM IST
மத்திய அரசு ஜிபிஎஃப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜி.பி.எஃப் திட்டம் மீதான வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. பி.பி.எஃப் வட்டி விகிதத்திற்கு ஏற்ப ஜி.பி.எஃப் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.

முன்னதாக பி.பி.எஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8 சதவீதத்திலிருந்து 7.9 சதவீதமாகக் குறைத்து அறிவித்திருந்தது. அதன்படியே ஜிபிஎஃப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஃப் என்றால் என்ன?

பி.எஃப் போன்றே அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் ஒரு பங்களிப்பே ஜி.பி.எஃப். இந்த திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணத்தை, ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டு அவர்களின் சில அவசர செலவுகளுக்காக அட்வன்ஸாக திரும்பப் பெற முடியும்.

ஜி.பி.எஃப் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்கள் ஓய்வுபெறும் போது திருப்பி அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இடையில் பணம் பற வேண்டும் என்றால் குறைந்த 10 வருடம் பணியிலிருந்திருக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற வேண்டும்.

ஜி.பி.எஃப் கீழ் பெறப்படும் வட்டி விகிதத்திற்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

மேலும் பார்க்க:

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...