இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமம் ரத்து!

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், கலை மற்றும் பண்பாடு, ஆதரவற்றோர் காப்பகங்கள் போன்ற களப்பணிகளை ஆற்றி வருகிறது.

இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமம் ரத்து!
வருவாய்: டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 21,400 கோடி ரூபாய் வரவாய்யை இன்போசிஸ் பதிவு செய்துள்ளது.
  • News18
  • Last Updated: May 14, 2019, 1:37 PM IST
  • Share this:
வெளிநாட்டு நிதி பெறுவதில் மோசடி செய்ததாக இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

என்ஜிஓ என அழைக்கப்படும் அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதி குறித்து முறையாக அறிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐ.டி., சேவைகள் நிறுவனமான இன்ஃபோசிஸ் கீழ் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கடந்த 6 வருடங்களாக வெளிநாட்டு நிதி எவ்வளவு வந்தது, எதற்காகச் செலவு செய்யப்பட்டது என்று அரசுக்குக் கணக்கு காண்பிக்காமல் வந்துள்ளது.


இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன்


இது குறித்து இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனை தொடர்பு கொண்டு கேட்ட போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் 2016-ன் கீழ் வெளிநாட்டு நிதி குறித்த நாங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்குத் தக்க முறையில் விளக்கம் அளித்துள்ளோம். மீண்டும் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் உரிமத்தை அளிக்க உறுதி அளித்துள்ளார்கள் என்று தெரிவித்தனர்.

1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், கலை மற்றும் பண்பாடு, ஆதரவற்றோர் காப்பகங்கள் போன்ற களப்பணிகளை ஆற்றி வருகிறது.இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷனின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
First published: May 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading