Home /News /business /

கோதுமை மாவு, மைதா ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

கோதுமை மாவு, மைதா ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!

கோதுமை

கோதுமை

வெளிநாடுகளில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்த நிலையில், ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியது. அதன் எதிரொலியாக உள்நாட்டுச் சந்தையிலும் விலை உயரத் தொடங்கியது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த மே மாதத்தில் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில், கோதுமை மாவு, மைதா மற்றும் செமோலினா, முழு தானிய ஆட்டா ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கடந்த சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் இந்தப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அமைச்சரவை ஏற்கனவே எடுத்த இந்த முடிவு குறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்தப் பொருட்களில் சிலவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, இந்த இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில், “கோதுமை மாவு, மைதா, செமோலினா, முழு தானிய ஆட்டா ஆகிய பொருட்களானது ஏற்றுமதிக்கான அனுமதி பட்டியலில் இருந்து தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 - 20 காலகட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கட்டுப்பாடுகளுக்கு இந்த அறிவிக்கை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ALSO READ | சிறு தானியங்கள் குறித்து தொல்காப்பியம், புறநானூற்றை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேச்சு

    முன்னதாக, கோதுமை மாவுக்கு தடை விதிப்பது என்று மத்திய அரசு கடந்த 25ஆம் தேதி முடிவு செய்தது. மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டுச் சந்தையில் கோதுமை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், கடந்த மே மாதம் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

    வெளிநாடுகளில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்த நிலையில், ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியது. அதன் எதிரொலியாக உள்நாட்டுச் சந்தையிலும் விலை உயரத் தொடங்கியது.

    கடந்த ஏப்ரல் - ஜூலை 2022 காலகட்டத்தை கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கோதுமை மாவு ஏற்றுமதி என்பது 200 சதவீதம் அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் விலைவாசி உயரத் தொடங்கியது. கடந்த 2021 - 2022 காலகட்டத்தில் சுமார் 246 மில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்திருந்தது. தற்போதைய நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகடத்தில் ஏற்றுமதி என்பது 128 மில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது.

    ALSO READ | ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - பிரதமர் மோடி

    உள்நாட்டு சில்லறை விற்பனையில், கடந்த ஆண்டில் கோதுமை விலை ரூ.25.41 ஆக இருந்த நிலையில், இது 22 சதவீதம் அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் ரூ.31.04 என்று ஆனது. அதேபோன்று, சராசரி ஆட்டா சில்லறை விற்பனை விலையும் 17 சதவீதம் அதிகரித்து ரூ.35.17 ஆக உள்ளது. இதற்கிடையே, கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக மாவு ஆலைகளின் உரிமையாளர்கள் தங்கள் கவலைகளை அரசுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Central government, Wheat

    அடுத்த செய்தி