முகப்பு /செய்தி /வணிகம் / கடைசி வாய்ப்பு.. லாபம் கொட்டும் அரசு வங்கியின் சிறப்பு திட்டம் முடிவுக்கு வருகிறது!

கடைசி வாய்ப்பு.. லாபம் கொட்டும் அரசு வங்கியின் சிறப்பு திட்டம் முடிவுக்கு வருகிறது!

இந்தியன் வங்கி திட்டம்

இந்தியன் வங்கி திட்டம்

இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுக் குறித்த அறிவிப்பை இந்தியன் வங்கி மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

141 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை  கொண்டுள்ள இந்தியன் வங்கி இந்தியாவின் ஏழாவது பெரிய பொதுத்துறை வங்கியாகும். 6000க்கும் மேற்பட்ட கிளைகள், 5400 ஏடிஎம்கள் மற்றும் 100% CBS நெட்வொர்க்குடன் கூடுதலாக, இந்தியன் வங்கி 77 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியன் வங்கி தனது "IND UTSAV 610" சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை செப்டம்பர் 14, 2022 அன்று வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்தது. இந்த சிறப்பு டெபாசிட் திட்டம் 610 நாட்களுக்கு நிலையான முதிர்வு காலத்தை கொண்டுள்ளது மற்றும் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. .

வட்டி மட்டுமே ரூ.36,000 கிடைக்கும்.. காலத்துக்கும் நின்னு பேசும் எல்.ஐ.சியின் ஜீவன் உமாங் பாலிசி!

இந்தியன் வங்கி தனது இணையதளத்தில் ""IND UTSAV 610" - 610 நாட்களுக்கான சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது மக்களுக்கு 6.10% வட்டி மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.25% வட்டி, சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 6.50% வட்டி (80 வயது மற்றும் அதற்கு மேல்) வழங்குவதாக அறிவித்தது. இந்த திட்டம் வரும் 31.10.2022 மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதற்குள் விருப்பம் உள்ளவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் இணையலாம் என அறிவிக்கப்பட்டது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பை இந்தியன் வங்கி மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளது.

Fixed deposit: வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்! டெபாசிட் செய்ய இதுதான் சரியான டைம்

18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை ஓபன் செய்யலாம். கணக்கைச் செயல்படுத்த, குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ. 2 கோடி. இந்தியன் வங்கியின் "IND UTSAV 610" பிக்சட் டெபாசிட் திட்டம் அக்டோபர் 31, 2022 வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.

ரூ. 2 கோடிக்கு கீழ் உள்ள உள்நாட்டு டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் இந்தியன் வங்கியால் 04.10.2022 அன்று உயர்த்தப்பட்டது. திருத்தத்தைத் தொடர்ந்து, இந்தியன் வங்கி இப்போது 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 2.80% முதல் 5.65% வரை வழங்குகிறது. ரு.10 கோடி வரையிலான தொகைகளுக்கு, மூத்த குடிமக்களுக்கான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 0.50% கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Fixed Deposit, Indian Bank, Savings