மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழி, அதனைத்தொடர்ந்து இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புகளைச் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்கள் ஆணைத்திடம் இருந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் உள்ளூர் மொழிகளிலும் விமான அறிவிப்பைச் செய்ய வேண்டும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக இதுகுறித்த விவரம் அறிந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தனியார் விமான நிலைய ஆப்ரேட்டர்களுக்கும் இதுகுறித்த அறிவிப்பை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாம். இந்தப் புதிய விதிகள் அறிவிப்புகள் இல்லாமல் அமைதியாக இயங்கும் விமான நிலையங்களுக்குப் பொருந்தாது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் உள்ளுர் மொழிகளில் அறிவிப்பைச் செய்யவேண்டும் என 2016-ம் ஆண்டு பரிந்துரைத்த நிலையில் அது தற்போது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வருகிறது.
இந்தியாவில் 100 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் மொழியில் விமான அறிவிப்புப் பலகை இல்லை என சர்ச்சை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: இந்தாண்டின் மிக குறைந்த விலையில் பெட்ரோல், டீசல்
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.