பணவீக்கம், இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுகள், வரி விதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் உலக அளவில் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் இந்தியாவில் எண்ணெய் மற்றும் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களும் விலை அதிகரித்தன. சமையல் எண்ணெய்யும் விதிவிலக்கு இல்லாமல் தீவிரமான தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விலை ஏற்றம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய அரசு கடந்த செவ்வாயன்று கஸ்டம்ஸ் சுங்க வரி மற்றும் விளைபொருட்களுக்கான டெவலப்மெண்ட் செஸ் ஆகிய இரண்டுமே எண்ணெய் இறக்குமதியில் இருந்து விலக்கப்பட்டன என்று கூறியது.
ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு 2022-2023 மற்றும் அடுத்த நிதியாண்டு 2023-2024 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும், ஆண்டுக்கு தலா 20 லட்சம் மெட்ரிக் வீதம் கச்சாசோயாபீன் எண்ணெய் மற்றும் கச்ச சூரியகாந்தி எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளையும் எந்த விதமான இறக்குமதி வரியும் செலுத்தாமல் இறக்குமதி செய்யலாம் என்று நிதி அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இதன் மூலம் மார்ச் 31 2024 வரை மொத்தமாக 80 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய்யை சுங்க வரியின்றி இறக்குமதி செய்யலாம். இந்த வரி விலக்கு உள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் குறைய உதவும், பணவீக்கமும் கட்டுப்படும். இந்த வரி விலக்கால் சோயாபீன் எண்ணெயின் விலை லிட்டருக்கு ₹3 வரை குறையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இந்த சுங்க வரி விலக்கை பற்றி அரசு ஒரு நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளுமே ஆண்டுக்கு தலா 20,00,000 மெட்ரிக் டன் வரை இறக்குமதி செய்யும் பொழுது டாஃரிப் ரேட் கோட்டாவின் அடிப்படையில் சுங்க வரி மற்றும் 5.5 மேம்பாட்டு செஸ் இரண்டும் நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே வரும் கச்சா எண்ணை பொருட்களின் விலையைக் குறைக்க, அரசு பெட்ரோல் மட்டும் டீசலுக்கு எக்சைஸ் டியூட்டியைக் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதி வரியையும் தற்காலிகமாக விலக்கியுள்ளது.
இறக்குமதி சார்ந்த அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்குகள் அறிவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், ஏற்றுமதி பொருட்களுக்கு வரி அதிகரித்துள்ளது. இரும்பு சார்ந்த அனைத்து பொருட்களுக்குமே எக்ஸ்போர்ட் வரி சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரைதான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இந்தியாவில் சோயாபீன் எண்ணெய் கிட்டத்தட்ட 35,00,000 மெட்ரிக் டன் வரை தேவை இருக்கிறது என்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆண்டுக்கு 16 – 18,00,000 மெட்ரிக் டன் வரை தேவை இருக்கிறது என்றும், இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also see... மருத்துவர்களுக்கான Professional Indemnity Insurance அறிமுகம்.!
சூரியகாந்தி எண்ணெயைப் பொறுத்தவரை இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள அளவுக்கும் குறைவாகத்தான் இந்தியா இறக்குமதி செய்யும். ஆனால் சோயாபீன் எண்ணெய் விலக்கு அளிக்கப்பட அளவை விட 15,00,000 மெட்ரிக் டன் அதிகமாக இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதேபோல தவிட்டு எண்ணெய் மற்றும் கனோலா எண்ணெய் ஆகிய இரண்டு வகைகளுக்குமே வரி விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Oil companies, Sunflower Seeds