உள்ளூர் வியாபாரிகளை காக்க, அமேசான், பிளிப்கார்ட்டுக்கு புதிய கட்டுப்பாடு

ஆன்லைன் ஷாப்பிங்

அமேசான், பிளிப்கார்ட் போன்றவை நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உள்நாட்டு வியாபாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனத்திற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான், பிளிப்கார்ட் போன்றவை தங்கள் நிறுவனப் பொருட்களை விற்பது தடை செய்யப்படுகிறது. மேலும் சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களின் ஏதேனும் ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்யேகமாக விற்பதும் தடுக்கப்படுகிறது.

அதேபோல் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25 விழுக்காட்டிற்கு மேல் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் விற்கக் கூடாது என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதற்கான நடைமுறையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்


இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என ஆண்டுதோறும் ஆடிட்டர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கவும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.





பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் வழங்கும் அதிரடி தள்ளுபடியால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக உள்நாட்டு வியாபாரிகள் புகார் அளித்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வருகின்றன.

Also see...
Published by:Vaijayanthi S
First published: