முகப்பு /செய்தி /வணிகம் / அடுத்த 3 மாதங்களுக்கான PF பணத்தை உங்களுக்காக அரசே செலுத்தும்!

அடுத்த 3 மாதங்களுக்கான PF பணத்தை உங்களுக்காக அரசே செலுத்தும்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இதற்கு குறிப்பிட்ட அந்த நிறுவனம் 100 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்க வேண்டும்.

  • Last Updated :

குறிப்பிட்ட வருவாய் ஈட்டுவோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அரசே பிஎஃப் பணத்தை செலுத்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கக்கூடாது என மத்திய அரசு இன்று சில பொருளாதார திட்டங்களை அறிவித்தது.

இதன் அடிப்படையில் EPF எனப்படும் ஊழியர்களுக்கான வைப்பு நிதித் தொகையை ஊழியர் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே செலுத்துவிடுவதாக அறிவித்துள்ளது. இரு தரப்பின் சார்பிலும் தலா 12 சதவிகிதத்தை அரசே செலுத்திவிடும்.

இதற்கு குறிப்பிட்ட அந்த நிறுவனம் 100 ஊழியர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக அதில் பணியாற்றும் 90 சதவிகித ஊழியர்கள் 15 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களாய் இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே ஊழியர்களின் சார்பாகவும் நிறுவனத்தின் சார்பாகவும் அரசே அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிலாளர் வைப்பு நிதி பணத்தை செலுத்திவிடும்.

top videos

     மேலும் பார்க்க: ஏழை மக்களுக்கு உதவ ₹1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு..! - நிர்மலா சீதாராமன்

    First published: