பொருளாதாரத்தை மேம்படுத்த கார்ப்ரேட் வரி குறைப்பு - வரலாற்றுச் சாதனை என மோடி புகழாரம்!

இன்றைய இந்த அறிவிப்பின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் காணாத உச்சத்தை இன்று ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தை அடைந்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்த கார்ப்ரேட் வரி குறைப்பு - வரலாற்றுச் சாதனை என மோடி புகழாரம்!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: September 20, 2019, 4:47 PM IST
  • Share this:
இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்த உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்ரேட் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25.2 சதவிகிதமாகக் குறைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாக நாட்டின் ஜிடிபி வீழ்ச்சியை சரிசெய்யவும் இந்த வரிக்குறைப்பு முறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளிலேயே இந்த வரிக்குறைப்பு அறிவிப்பு நன்மை அளிப்பதாக உள்நாட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இன்றைய இந்த அறிவிப்பின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் காணாத உச்சத்தை இன்று ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தை அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 0.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.




இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், “கார்ப்ரேட் வரியைக் குறைக்க எடுத்த நடவடிக்கை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் இது ஒரு சிறந்த ஊக்கம் ஆகும். சர்வதேச அளவில் தனியார்களின் முதலீட்டை ஈர்க்க முடியும். இன்னும் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது 130 கோடி இந்திய மக்களுக்கும் வெற்றி ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கடும் வீழ்ச்சியில் இந்தியப் பொருளாதாரம் - சர்வதேச நாணய நிதியம் அறிக்கை

வடமாநிலத்தவர் ஆதிக்கம் - தமிழருக்கு திறமையில்லை: அமைச்சர்
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்