வீட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களில் இதுவும் ஒன்று. பெண் குழந்தைகளுக்காக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் திட்டங்கள், அதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முதலில் பார்க்க போவது,Beti Bachao Beti Padhao . இதன் அர்த்தம் பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் பெண் குழந்தையை படிக்க வையுங்கள். இந்த திட்டம் பெண் குழந்தை கல்விக்கு உதவியாக இருக்கிறது. கல்வி மட்டுமின்றி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது, பெண்களுக்கு மேம்பட்ட அல்லது உயர்கல்வி கிடைக்க வேண்டும் ஆகிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கிறது.
சுகன்யா சம்ரிதி யோஜனா. இது குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இந்தத் திட்டத்தில் இணையலாம். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 15 ஆண்டுகளுக்கு செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளின் முடிவில் கணிசமான தொகை, கிட்டத்தட்ட முதலீடு செய்த தொகையின் இரட்டிப்புத் தொகையாக குழந்தைக்கு கிடைக்கும்.
இதையும் படிங்க.. எஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பை தொடங்கியவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.. ஏன் தெரியுமா?
இந்தத் திட்டத்தில் முதல் முதலீட்டுத் தொகையாக 250 ரூபாயை செலுத்த வேண்டும்.ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கணிசமான தொகை கிடைக்கும் போது, அவை உயர் கல்விக்கு உதவியாக இருக்கும்.
பாலிக்க சம்ரிதி யோஜனா. இந்தத் திட்டம் மத்திய அரசால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பின்னணியிலிருந்து வரும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதையும் அவர்கள் கல்வி தடைபடாமல் இருப்பதையும் இந்த திட்டம் உறுதி செய்கிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்திருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி படிப்போடு மாதாந்திர ஸ்காலர்ஷிப்களையும் வழங்குகிறது.
இந்தியாவில் நாளை (ஜனவரி 24) பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர் ஆகிய நீங்கள் உறுதி செய்யுங்கள். அவர்களின் கல்வி தடைபடாமல் அவர்களுடன் நில்லுங்கள். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், சலுகைகள்ள் அவர்களை சென்று சேர துணை புரியுங்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl Child, Savings