ஹோம் /நியூஸ் /வணிகம் /

சீனியர் சிட்டிசன்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்… இன்று முதல் அமலுக்கு வந்தது சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

சீனியர் சிட்டிசன்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்… இன்று முதல் அமலுக்கு வந்தது சேமிப்பு திட்டத்திற்கான வட்டி உயர்வு!

மாதிரி படம்

மாதிரி படம்

மாதாந்திர வருமான திட்டத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக வட்டியை உயர்த்த இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தக்கூடிய மத்திய அரசு சேவைகளில் ஒன்று தான் போஸ்ட் ஆபிஸ் எனப்படும் இந்திய தபால் துறை. இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள மக்கள் வரை தங்களிடம் உள்ள சிறிய பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அது அஞ்சல் அலுவலக சிறு சேமிப்புத்திட்டங்களாகத் தான் இருக்கும்.

ஆர்.டி எனப்படும் தொடர் வைப்புத்தொகை, எப்.டி எனப்படும் நிலையான வைப்புத்தொகை, பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா (செல்வமகள்), மாதாந்திர சேமிப்புத்திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் என பல சிறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக அதிகரிக்கப்படும். ஆனால் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒன்பது காலாண்டுகளுக்கு மாற்றி அமைக்கப்படாது. இந்நிலையில் தற்போது சிறு சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்த பிறகு, தபால் நிலையங்களில ஒரு ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.6 சதவீதமும், இரண்டு ஆண்டுகளுக்கு 6.8 சதவிகிதமும், 3 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதம் மற்றும் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது டிசம்பர் இறுதியில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வட்டி விகிதமானது 2023ன் முதல் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றமானது இன்று ( 2023 ஜனவரி 1)  முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைத்து சிறு சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

இன்று முதல் (ஜனவரி 1, 2023) வட்டி உயர்வு ஏற்படும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத்திட்டங்கள்:

போஸ்ட் ஆபிசில் நடைமுறையுள்ள தேசிய சேமிப்புப் பத்திரம் ( NSC) தற்போது 6.8 % லிருந்து 7 % உயர்ந்துள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டத்தில் தற்போது 7.6 சதவீத வட்டி வழங்கப்படும் நிலையில் தற்போது 8 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெர்ம் டெபாசிட் திட்டத்தின் (Term deposit) வட்டி விகிதங்கள் 1.1 புள்ளிகள் வரை உயரும்.
மாதாந்திர வருமான திட்டத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக வட்டியை உயர்த்த இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
First published:

Tags: Business, Savings