Airfare Hike : உள்நாட்டு விமான சேவைக்கான கட்டணம் உயர்வு... ஜூன் 1ம் தேதி அமலுக்கு வரும்.. விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

விமானக் கட்டணம்

உள்நாட்டு விமான கட்டணத்தின் குறைந்தபட்ச வரையறையை 16 சதவீதமாக உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    உள்நாட்டு விமான கட்டணத்தின் குறைந்தபட்ச வரையறையை 15 சதவீதமாக உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கொரோனா 2-வது அலை காரணமாக விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வருவாய் இழந்து நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, உள்நாட்டு விமான கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் 1ம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் 40 நிமிடத்துக்கு உட்பட்ட, விமான போக்குவரத்துக்கான கட்டணம் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் படிக்க... அவசர சிகிச்சை அளித்து ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்!

    அதேநேரம் அதிகபட்ச வரையறையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரிக்கும் என அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: