Home /News /business /

மருந்து, மாத்திரை செலவுகள் அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் இந்த ஆப் உங்களுக்கு தான்

மருந்து, மாத்திரை செலவுகள் அதிகமாக இருக்கிறதா? மத்திய அரசின் இந்த ஆப் உங்களுக்கு தான்

 ‘Pharma Sahi Daam’ செயலி

‘Pharma Sahi Daam’ செயலி

குறைந்த விலையில் மக்கள் மருந்து வாங்கும் வகையில் மத்திய அரசு ‘Pharma Sahi Daam’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்றைய துரிதமான வாழ்க்கைச் சூழலில் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நம் ஆயுள் வரை பின் தொடர்ந்து வரும் நோய்கள் பல மனிதர்கள் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதர்க்கு எளிதாக  ‘Pharma Sahi Daam’ என்றொரு ஆப்-ஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 

    நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழலில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். குறிப்பாக, ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு அல்லது பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் கலந்து விட்டது.

    ஒருபக்கம் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டாலும், மற்றொரு பக்கம் அதன் செலவினங்களும் நம்மை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்குத் தீர்வு காணும் விதமாக ‘Pharma Sahi Daam’ என்றொரு ஆப்-ஐ மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

    ஆண்டிராய்டு, ஐஓஎஸ் டிவைஸ்களில் டவுன்லோடு செய்யலாம் :

    இந்த ஃபார்மா ஆப்-ஐ நீங்கள் உங்களது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். பிராண்டட் மருந்துகளுக்கு ஈடாக அதே பண்புகளைக் கொண்ட, விலை குறைவான மாற்று மருந்துகளை இது உங்களுக்குக் காண்பிக்கும்.

    மருத்துவரின் பரிந்துரையை வைத்து ஒப்பீடு செய்யலாம் :

    ஏதேனும் நோய்க்காக மருத்துவரை அணுகி நீங்கள் ஆலோசனை செய்யும் பட்சத்தில், அவர் சில பிராண்டட் மருந்துகளை உங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடும். அவை மிக விலை உயர்ந்தவையாக இருக்கலாம். அத்தகைய சமயங்களில், நீங்கள் ஃபார்மா ஆப்-பில் அந்த மருந்துகளின் பெயர்களைத் தட்டினால் போதும், அதே பண்புகளைக் கொண்ட விலை குறைவான மாற்று மருந்துகள் உங்களுக்குப் பட்டியலிட்டுக் காட்டப்படும்.

    Also Read : தமிழகம், மத்திய பிரதேசத்தில் கிசான் கிரெடிட் கார்டை டிஜிட்டல் மயமாக்கும் ரிசர்வ் வங்கி!

    மருந்துகளின் தரம் குறையாது :

    மருந்துகளில் உள்ள மூலப்பொருள் என்ன என்பதில் தான் அதன் பண்புகள் உள்ளதே தவிர, அதன் பிராண்டட் பெயர்களில் ஒன்றுமே கிடையாது. உதாரணத்திற்கு, இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ஆகுமெண்டின் என்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். இதன் 10 மாத்திரைகள் விலை ரூ.200 ஆகும். ஆனால், இதை நீங்கள் ஃபார்மா ஆப் பரிந்துரைக்கு மருந்துகளை வாங்கும்போது 6 மாத்திரைகள் ரூ.50 மட்டுமே.

    இதேபோல, ஆசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் PAN D மாத்திரை (15 மாத்திரைகள்) விலை ரூ.199 ஆகும். அதுவே, மாற்று நிறுவனத்தில் 10 மாத்திரைகளை ரூ.22க்கு வாங்க முடியும்.

     
    Published by:Janvi
    First published:

    Tags: Apps, Central government, Medicine, Online medicine

    அடுத்த செய்தி