பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியால் மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் தெரியுமா?

பெட்ரோல், டீசல்

கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி 19 ரூபாய் 98 காசுகளில் இருந்து 32 ரூபாய் 92 காசுகளாக அதிகரிக்கப்பட்டது. 

 • Share this:
  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பின் மூலம் கடந்த நிதி ஆண்டில் 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி 19 ரூபாய் 98 காசுகளில் இருந்து 32 ரூபாய் 92 காசுகளாக அதிகரிக்கப்பட்டது.  இதேபோல் டீசல் மீதான கலால் வரி 15 ரூபாய் 83 காசுகளில் இருந்து 28 ரூபாய் 35 காசுகளாக மத்திய அரசு உயர்த்தியது.

  இந்தநிலையில் 2019-2020ம் ஆண்டில் பெட்ரோல் மூலம் 66 ஆயிரத்து 279 கோடி ரூபாய் கலால் வரி கிடைத்த நிலையில், தற்போது 1 லட்சத்து ஆயிரத்து 598 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதேபோல் டீசல் மூலம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 296 கோடி ரூபாய் கலால் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பின் மூலம் கடந்த 2020 மற்றும் 2021ம் நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 3 லட்சத்து 44 ஆயிரத்து 766 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

  கடந்த 2019-2020ம் நிதியாண்டை விட இது 88 சதவீதம் அதிகம் என அவர் தெரிவித்தார்.  2018 மற்றும் 19ம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைத்ததாக மத்திய இணை அமைச்சர் ராமேஷ்வர் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: