கூகுள் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி உத்தரவிட்டது.
இரண்டு வெவ்வேறு வழக்குகளில் கூகுளுக்கு அபராதம் விதித்தது . ஆண்ட்ராய்டு கைபேசிகள் தொடர்பான வர்த்தகத்தில் முறைகேடாக செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. மேலும் பிளே-ஸ்டோர் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. அதனை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறு கூகுளுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் சார்பில் தேசிய பெருநிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டப்பட்டது. மேலும், அபராத தொகை உத்தரவிற்கு தடை விதிக்க கோரியும் முறையிட்டிருந்தது. இந்த மனு தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவாஸ்தவா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக ஜனவரி 4 அன்று விசாரணைக்கு வந்தது,
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், “அபராதத்திற்கு தடை விதிக்க முடியாது. சிசிஐ சார்பில் விதிக்கப்பட்ட ரூ. 1,337.76 கோடி அபராதத் தொகையில் 10 சதவீதத்தை (ரூ.133 கோடி) கூகுள் நிறுவனம் கண்டிப்பாக செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் இந்த வழக்கு குறித்து தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இவ்வழக்கு கடந்த வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றமும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (NCLAT) உத்தரவுக்கு எதிரான கூகுளின் மனுவை ஏற்க மறுத்துவிட்டது.
அதோடு இது குறித்து தீர்ப்பாயம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) விதித்த அபராதத்தில் 10 சதவீதத்தை டெபாசிட் செய்ய கூகுளுக்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Supreme court