• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மைக்ரோசாப்டின் ‘Bing’-ல் அதிகம் தேடப்பட்ட வார்த்தை Google !

மைக்ரோசாப்டின் ‘Bing’-ல் அதிகம் தேடப்பட்ட வார்த்தை Google !

கூகுள்

கூகுள்

கூகுள் என்ன சொல்கிறது என்றால் போட்டியை முடக்க முடியாது போட்டிக்கு வழிவிட்டுத்தான் வர்த்தகம் செய்கிறோம் என்கிறது

  • News18
  • Last Updated :
  • Share this:
    கூகுள் என்பதும் தேடல் எந்திரம்தான் மைக்ரோசாப்டின் பிங் என்பதும் தேடல் எந்திரம்தான், ஆனால் மைக்ரோசாப்ட் தேடல் எந்திரமான பிங்கில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை கூகுள்தானாம். இதனை அல்ஃபபெட் நிறுவனத்தின் அல்பான்சோ லமாட்ரிட் லுக்சம்பர்கில் ஐரோப்பிய யூனியன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.  2018-ல் தொடரப்பட்ட anti-trust வழக்கில் 2ம் நாளில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “பிங் தேடல் எந்திரத்தில் இதுவரை அதிகம் தேடப்பட்ட வார்த்தை கூகுள்தான் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

    அதாவது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களில் தங்கள் தேடல் எந்திரத்தையே பிரதானப்படுத்தும் வேலைகளைச் செய்துள்ளனர் என்றும் போட்டியை முடக்கி தன் தேடல் எந்திரத்தையே அநியாயமாக ஏகபோகமாக்க கூகுள் விரும்புகிறது என்றும் ஐரோப்பிய கமிஷன் கூகுள் மீது அபராதம் விதித்தது. ஐரோப்பிய யூனியன் கோர்ட் இந்த அபராதத்தையும் நீக்கி anti-trust வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூகுள் தொடர்ந்த வழக்கில்தான் இந்த வாதம் முன் வைக்கப்பட்டது. கூகுளுக்கு 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது, அதையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட வழக்குதான் இது.

    இந்த வழக்கில்தான் வழக்கறிஞர் கூகுள் யாரையும் தங்கள் எந்திரத்தில்தான் தேட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை, மக்களின் சாய்ஸ் கூகுள்தான் என்பதற்காக இந்த பிங் தேடல் எந்திரத்திலும் கூகுள் என்ற வார்த்தைதான் அதிகம் தேடப்பட்டுள்ளது என்று ஒரே போடாகப் போட்டார். மேலும் சர்வேக்களின் படி 95% மக்கள் கூகுளைத்தான் விரும்புகின்றனர் என்றார்.

    மொத்தம் கூகுள் மீது 3 விதமான பொறுப்பின்மை வழக்குகளை தொடர்ந்தது. இதில் ஒன்றுதான் கூகுள் தேடல் எந்திரத்தின் ஏகபோகம் பற்றியது மற்றவை ஷாப்பிங் மற்றும் தேடல் பற்றிய வழக்குகள் ஆகும். ஆனால் 3 வழக்குகளுக்கு எதிராகவுமே கூகுள் மேல்முறையீடு செய்துள்ளது. அபராதம் பெரிய தொகையாக இருந்தாலும் அது கூகுளுக்கு ஒரு பெரிய தொகையே அல்ல என்று சிலர் கூறுகின்றனர்.

    ஆனால் கூகுள் என்ன சொல்கிறது என்றால் போட்டியை முடக்க முடியாது போட்டிக்கு வழிவிட்டுத்தான் வர்த்தகம் செய்கிறோம் என்கிறது, உதாரணமாக ஆண்ட்ராய்ட் அனைவருக்குமான தெரிவுகளை உருவாக்கித் தந்துள்ளது என்றும் ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் வெற்றிகரமான வர்த்தகத்துக்கு ஆண்ட்ராய்ட் ஆதரவு அளிக்கிறது என்றும் இந்த வழக்கு உண்மைகளின் அடிப்படையிலோ சட்டத்தின் அடிப்படையிலோ தொடுக்கப்பட்டதல்ல என்கிறது.

    ஆனால் ஆண்ட்ராய்டின் மாற்று வடிவங்களைக் கொண்டு தயாரிக்க முனையும் போன் தயாரிப்பாளர்களை கூகுள் ஊக்குவிப்பதில்லை என்றும் இந்தியாவில் தங்கள் ஆண்ட்ராய்ட் வடிவத்தை ஏகபோகமாக்கப் பார்க்கிறது என்றும் தன்னுடைய பணபலத்தினால் போட்டியாளர்களை சட்ட விரோதமாக ஒடுக்கப்பார்க்கிறது என்றும் 2 ஆண்டுகால விசாரணையில் இந்தியாவின் பொறுப்பின்மை கண்காணிப்பு குழு தன் அறிக்கையில் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: