ஹோம் /நியூஸ் /வணிகம் /

‘கூகுள் ஷாப்பிங்’ சேவை தொடக்கம்... இந்தியாவின் புதிய ஷாப்பிங் அனுபவம்!

‘கூகுள் ஷாப்பிங்’ சேவை தொடக்கம்... இந்தியாவின் புதிய ஷாப்பிங் அனுபவம்!

கூகுள் ஷாப்பிங்

கூகுள் ஷாப்பிங்

விரைவில் ஆப்லைன் வணிகர்களையும் இதற்குள் கொண்டு வரும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  `கூகுள் சர்ச்' நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்த ஷாப்பிங் சேவையை இந்தியாவில் தொடங்கி, மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்க உள்ளது.

  கூகுள் ஷாப்பிங் சேவையில் ஒரே நேரத்தில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் உள்ள பொருட்களைத் தேடி, ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இந்தச் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டது மட்டும் இல்லாமல் செல்போன் முதல் வீட்டை அலங்கரிக்க உதவும் பொருட்கள் வரை அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

  இவ்வளவு நாட்களாக ஒரு பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட இ-காமர்ஸ் தளங்கள் சென்று எங்கு குறைவாக விற்கிறார்கள் என்று தேடி வந்த நமக்கு, கூகுள் ஷாப்பிங் கண்டிப்பாக ஒரு வரப் பிரசாதமாக கிடைத்துள்ளது.

  இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தேடுதல் பக்கமாக மட்டும் இல்லாமல், அதிகளவில் விற்பனையாகி வரும் டிரெண்டிங் பொருட்களையும் பட்டியலிடும்.

  உங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேர்வு செய்த பிறகு, சிறந்த விலையில் அதை விற்பனை செய்யும் தளங்களின் பட்டியலையும் பட்டியலிடும்.

  பின்னர் எந்தத் தளத்தில் நாம் வாங்க இருக்கும் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள் எனக் கண்டறிந்து அதைத் தேர்வு செய்யலாம். பின்னர் ஒரே கிளிக்கில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று வாங்கிவிடலாம்.

  கூகுள் நிறுவனம் தற்போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், சிறு இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களையும் பட்டியலிடுகிறது.

  விரைவில் ஆஃப்லைன் வணிகர்களையும் இதற்குள் கொண்டு வரும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது.

  சரி, கூகுள் ஷாப்பிங் சேவை வழங்குவதால் அவர்களுக்கு என்ன லாபம்? ஷாப்பிங் சேவை தற்போது ஒரு சோதனை முயற்சி எனபதால் கூகுள் அதன் மூலம் வருவாய் ஈட்டும் எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தவில்லை. ஆனால் வரும் காலத்தில் இதன் மூலம் வருவாய் ஈட்டும் திட்டமும் கூகுளுக்கு உண்டு.

  மேலும் பார்க்க: நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...!

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Google shopping