மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் பெருநிறுவனங்களின் கட்டுப்பாடற்ற போக்கிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருசில தினங்களுக்கு முன்பு ஓயோ, மேக் மை டிரிப் போன்ற ஆன்லைன் டிராவல் ஹோட்டல் புக்கிங் நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதித்தது. இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் சார்பில் தேசிய பெருநிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டப்பட்டது. மேலும், அபராத உத்தரவிற்கு தடை விதிக்க கோரியும் முறையிட்டிருந்தது கூகுள் நிறுவனம். ஆனால் சிசிஐ—யின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்ட பெருநிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் கூகுள் தொடர்ந்த முறையீடு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறிவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் முறையிட்டது. இந்த வழக்கின் முகாந்திரத்தை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ள மூத்த வழக்கறிஞர் ஏஎம்.சிங்வி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் உள்ளிட் அமர்வு முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தார். அப்போது, இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது தொடர்பாக தங்களை முறையீட்டை பெரு நிறுவனங்களுக்கான சட்ட தீர்ப்பாயம் சரியான நேரத்தில விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், மிகவும் காலம் தாழ்த்தி ஏப்ரல் மாதம் பட்டியலிட்டிருப்பது நியாயமற்ற செயல் என முறையிட்டார்.
மேலும், இது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் வளர்ந்து வரும் ஆண்ட்ராய்டு போன் தொழிலை மிகவும் பாதிக்கும் என்றும் சிங்வி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கை வரும் பதினாறாம் தேதி திங்கள்கிழமை முழுமையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தில உச்சநீதிமன்றம் தலையிடாவிட்டால், ஆண்ட்ராய்ட் தற்போது நடைமுறையில இருக்கும் கூகுள் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய நேரிடும். கிட்டத்தட்ட 14-15 ஆண்டுகளாக வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு இலகுவானாதக இருக்கும் நடைமுறையில் மாற்றம் வந்தால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு ஆண்ட்ராய்ட் போன் பயோகமே மிகப்பெரிய தொய்வை சந்திக்கும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
அந்த தேக்கம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உபயோகம் மற்றும் விற்பனையையும் பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு விரைந்து, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.