Home /News /business /

ரிசர்வ் வங்கி போட்ட ரூல்ஸ்.. google payல் வர போகும் அதிரடி மாற்றம்!

ரிசர்வ் வங்கி போட்ட ரூல்ஸ்.. google payல் வர போகும் அதிரடி மாற்றம்!

 கூகுள் பே

கூகுள் பே

google payல் கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

    பணத்தை ஒருவருக்கு சுலபமாக அனுப்புவதற்கு டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகள் மிகவும் உதவியாக உள்ளன. அதுவும் முன்பை காட்டிலும் தற்போதுள்ள கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளினால் பணத்தை பிறருக்கு அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது. இவற்றின் பாதுகாப்பு மற்றும் இந்திய தொழில்நுட்ப விதிகளை கருதி அவ்வப்போது சில மாற்றங்களை இந்த செயலிகள் கொண்டு வருவது வழக்கம்.

    அந்த வகையில் கூகுள் பே செயலியில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆகவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது உங்களின் கார்டு நம்பர், எக்ஸ்பையரி தேதி போன்றவற்றை கூகுள் பே செயலியில் சேமித்து கொண்டு முன்பை போன்று பணத்தை ட்ரான்ஸ்பர் செய்ய இயலாது.

    ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்பிஐ) பேமென்ட் அக்ரிகேட்டர்கள் (பிஏ) மற்றும் பேமென்ட் கேட்வேகள் (பிஜி) சில புதிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதை கருத்தில் கொண்டு தான் கூகுள் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ் ஒழுங்குமுறைகளின் படி எந்தவொரு நிறுவனமும், கார்டு நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது என்று ஜனவரி 1, 2020 ஆண்டிலே அறிவித்திருந்தது. அதன்படி ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டு முதல் இந்த ஒழுங்குமுறையானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறையால் பல நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒருமுறை மட்டும் சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் யூசர்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வேறு சில புதிய சிக்கல்களும் எழலாம். கூகுள் பே செயலியில் இனி கார்டு விவரங்களை சேமிக்க இயலாது என்கிற அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் தந்துள்ளது. எனவே உங்களின் கார்டு விவரங்கள் அழிக்கப்படலாம் இருக்க நீங்கள் சில வழிமுறைகளை செய்தால் போதும்.

    இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகும் உங்களின் விசா அல்லது மாஸ்டர் கார்டு வசதி கொண்ட டெபிட் அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் இருக்க நீங்கள் ஒரு முறையாவது உங்களின் கார்டு விவரங்களை அதில் ரீ-என்டர் செய்ய வேண்டும். அதாவது 2021 ஆண்டு தொடங்கியதும் அந்த கார்டு விவரங்களை ஒரு முறையாவது பதிவிட்டு ஏதாவது வாங்கியிருக்க வேண்டும்.

    read more.. எதிர்பாராத நிதி நெருக்கடியை சமாளிப்பது எப்படி - சிம்பிள் டிப்ஸ்

    அப்படி செய்யவில்லை என்றால் உங்களின் கார்டு விவரங்கள் கூகுள் பே செயலியில் தோன்றாது. எனவே உங்களின் கார்டு விவரங்களை மீண்டும் எண்டர் செய்தாக வேண்டியிருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரூபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிஸ்கவர், டைனர்ஸ் கார்டு கொண்டவர்களின் கார்டு விவரங்களையும் டிசம்பர் 31, 2021-க்கு பிறகு கூகுள் நிறுவனம் சேமிக்க முடியாது. புதிய ஸ்டோரேஜ் கார்டு நடைமுறையின்படி இந்த நடவடிக்கை பின்பற்றப்படும். மேலும் ஜனவரி 1, 2022-க்கு பிறகு ஒவ்வொரு முறை பேமெண்ட் செலுத்தும்போதும் உங்கள் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Google pay, Reserve Bank of India

    அடுத்த செய்தி