இனி கூகுள் சர்ச், மேப்ஸ் மூலமாகவும் உணவு ஆர்டர் செய்யலாம்!

news18
Updated: May 24, 2019, 7:32 PM IST
இனி கூகுள் சர்ச், மேப்ஸ் மூலமாகவும் உணவு ஆர்டர் செய்யலாம்!
கூகுள்
news18
Updated: May 24, 2019, 7:32 PM IST
நகரங்களில் உணவை ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உணவு ஆர்டர் செய்வதற்காக புதியதாக ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலமாக நேரடியாக உணவை ஆர்டர் செய்யும் புதிய சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

அதற்காக கூகுள் நிறுவனம் கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளில் ‘ஆர்டர் ஆன்லைன்’ என்ற புதிய பொத்தான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் உணவை ஆர்டர் செய்ததற்கு ஆன்னலைன் மூலமாகவும், கூகுள் பே செயலி வழியாகவும், ரொக்கப் பணமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக DoorDash, Postmates, Delivery.com, Slice மற்றும் ChowNow நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகள் மட்டும் கிடைக்கும்.

அண்மையில் கூகுள் நிறுவனம் நடத்திய I/O 2019 மாநாட்டில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்களுக்காகப் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்தது மட்டுமில்லாமல், கூகுள் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை எளிமையாக்கும் வகையிலும் பல புதிய மாற்றங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:
Loading...
First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...