• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வொர்க் ஃப்ரம் ஹோம் விரும்பும் ஊழியர்களின் சம்பளம் குறைப்பு

வொர்க் ஃப்ரம் ஹோம் விரும்பும் ஊழியர்களின் சம்பளம் குறைப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

வர்த்தக தலைநகரமான சிலிகான் வேலியில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இதே போன்ற சம்பள அமைப்பை சோதனை செய்வதாகவும் ராய்ட்டர்ஸ் கூறி இருக்கிறது.

  • Share this:
ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தப்பிக்க பலரும் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை கவனித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் சுழற்சி முறையில் ஊழியர்கள் நேரடியாக அலுவலகத்தில் வந்து பணிபுரியும் விருப்பத்தை வழங்கி உள்ளன. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற நினைப்பவர்கள் வீட்டிலிருந்தும், அலுவலகம் வந்து வேலைபார்க்க நினைப்பவர்கள் அலுவலகம் வந்தும் வேலை பார்க்கலாம் என்ற விருப்பங்களை வழங்கி உள்ளன.

பெரும்பாலான ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காலவரையின்றி வீட்டிலிருந்தே வேலை செய்யும் கூகுள் ஊழியர்களுக்கு ஊதியம் குறைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. டெல்டா வேரியன்ட் அமெரிக்காவில் தீவிரமாக உள்ள நிலையில் நியூயார்க் நகர அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட விருப்பங்களை பயன்படுத்தி வருவதால், அவர்களின் முடிவின் அடிப்படையில் கூகுள் ஊதியக் குறைப்பை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Also Read : பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன்பு இதை நோட் பண்ணுங்க.. பிரபல வங்கியில் மாறிய ரூல்ஸ்!

கூகுள் உருவாக்கியுள்ள சேலரி கால்குலேட்டர் (salary calculator) மூலம் இந்த ஊதியக் குறைப்பு முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் உருவாகியுள்ள இந்த கால்குலேட்டர் அதன் ஊழியர்கள் வசிக்கும் பகுதி மற்றும் அங்கிருந்து அவர்கள் அலுவலகத்திற்கு வரும் தூரத்தை கணக்கில் எடுத்து கொள்கிறது.

அதன்படி இதுவரை உறுதி செய்யப்பட்டவற்றிலிருந்து, கூகுள் அலுவலகங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிப்பவர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை தேர்வு செய்தாலும், அவர்களின் ஊதியம் குறைக்கப்படாது. ஆனால் கூகுள் அலுவலகங்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நகரங்கள் மற்றும் பகுதிகளில் வசிக்கும் ஊழியர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை தேர்வு செய்வது அவர்களின் சம்பளக் குறைப்பிற்கு வழி வகுக்கும்.

இந்த ஊதிய வெட்டு அதிகபட்சம் 25% வரை இருப்பதாக கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸின் புதிய அறிக்கை ஒன்றில் கூகுள் நிறுவனத்தின் இந்த ஊதிய குறைப்பு நடவடிக்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் salary calculator-ஐ மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் சில ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி கூகுளின் நியூயார்க் அலுவலக ஊழியர்கள் அதே நகரத்தில் வசித்து வரும் நிலையில் அவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை தேர்ந்தெடுத்தால் அவர்களின் ஊதியம் குறைக்கப்படாது. அதுவே நியூயார்க் நகரத்திலிருந்து ஒரு மணி நேர ரயில் பயண தூரத்தில் இருக்கும் ஸ்டாம்ஃபோர்டில் வசிக்கும் ஒரு கூகுள் ஊழியர், வொர்க் ஃப்ரம் ஹோமை தேர்வு செய்தால் அவருக்கு ஊதியத்தில் 15% பிடித்தம் செய்யப்படும்.

Also Read : ஏடிஎம்-ல் பணம் இல்லையென்றால் வங்கிகளுக்கு அபராதம் - ரிசர்வ் வங்கி அதிரடி

இன்னும் சில ஸ்கிரீன் ஷாட்களில் "சியாட்டில், பாஸ்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ பகுதிகளில் வசிக்கும் கூகுள் ஊழியர்களுக்கான ஊதிய பிடித்தம் 5% மற்றும் 10% வேறுபாடுகளை காட்டுகின்றன. இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், நிறுவனத்தின் இழப்பீட்டுத் தொகுப்புகள் (compensation packages) எப்போதும் ஊழியர்களின் இருப்பிடத்தால் தீர்மானிக்கப்படுகின்றன என்று கூறி இருக்கிறார். ஊழியர்களுக்கான ஊதிய குறைப்பு சதவீதம் நகரத்திற்கு நகரம் மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றார்.

வர்த்தக தலைநகரமான சிலிகான் வேலியில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இதே போன்ற சம்பள அமைப்பை சோதனை செய்வதாகவும் ராய்ட்டர்ஸ் கூறி இருக்கிறது. கூகுளை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களும், இப்போது வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் தங்கள் நிறுவனங்களின் நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள சில ஊழியர்கள், நகரத்தை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளும் முக்கிய நகரத்தை விட மலிவானவை அல்ல. ஊதிய குறைப்பு நடவடிக்கை என்பது ஒரு ஊழியரின் நிதி நிலையை நேரடியாக பாதிக்கும். அதேபோல தங்களின் பயண தூரம் என்பது ஊதிய குறைப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: