ஹோம் /நியூஸ் /வணிகம் /

செயல்திறன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள கூகுள்..!

செயல்திறன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள கூகுள்..!

கூகுள்

கூகுள்

Google Layoffs | உலகளாவிய மந்தநிலை மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக அதிகரித்து வரும் அபாயங்களுக்கு நடுவே சர்வதேச அளவில் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்பிள், ட்விட்டர், மெட்டா, அமேசான் என பல சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், 2022-ல் டெக் மற்றும் ஸ்டார்ட்அப் செக்டர்களில் இருந்து தற்போது வரை சுமார் 135,000 ஒயிட்கலர் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே கூகுளின் தாய் நிறுவனமான Alphabet, சுமார் 10,000 பணியாளர்களை (மோசமாக செயல்படும்) அல்லது 6% பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய புதிய செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வழக்கமான 2 சதவீதத்திற்கு மாறாக, 6% பணியாளர்கள் அல்லது 10,000 பேரை மோசமான செயல்திறன் கொண்டவர்கள் என்று அடையாளம் காண கூகுள் மேனேஜர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிறுவனம் எதிர்பார்க்கும் செயல்திறனுக்கு குறைவாக செயல்படுபவர்களை அடையாளம் கண்ட பின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை செய்யப்படும் என்று நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செயல்திறனில் குறைவான மதிப்பெண் வாங்கி இருக்கும் ஊழியர்கள் அவர்களாகவே தங்கள் வேலையை ராஜினாமா செய்யும்படி கேட்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதன் ஒருகட்டமாக ranking and performance improvement plan-ன் கீழ் பணியாளர்களை மதிப்பீடு செய்ய டீம் மேமேஜர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணிநீக்க நடவடிக்கைகள் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை நிதி அழுத்தம், சாதகமற்ற சந்தை சூழ்நிலைகள் மற்றும் செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்ற உதவும் இந்த புதிய செயல்திறன் மேலாண்மை பிளானின் மூலம், டீம் மேனேஜர்கள் போனஸ் மற்றும் ஸ்டாக் கிரான்ட்ஸ் வழங்குவதைத் தவிர்க்கவும் கூட இந்த ரேட்டிங்க்ஸை பயன்படுத்தலாம் என்று இது தொடர்பான அறிக்கை கூறுகிறது.

Also Read : ஆயிரகணக்கில் அதிரடியாக பணி நீக்கம்; ஊழியர்களுக்காக இந்திய சட்டம் சொல்வது என்ன?

கூகுள் இதுவரை பணியாளர்களை குறைக்காமல் ஆட்சேர்ப்பை மட்டுமே நிறுத்தி வைத்திருந்த நிலையில் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் மேம்படுத்த பங்களிக்கும் பணியாளர்களுக்கு மட்டுமே வேலை என்ற முடிவை செயல்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ஹெட்ஜ் ஃபண்ட் கோடீஸ்வரரான கிறிஸ்டோபர் ஹோன் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

Also Read : ட்விட்டரில் இருந்து வெளியேறியவரா நீங்க...வாங்க வேலை இங்க தரோம்... "கூ"வின் புது யுக்தி!

பிற டிஜிட்டல் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக கிறிஸ்டோபர் ஹோன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான பாரம்பரிய பணியமர்த்தல் முறைகளுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தில் தற்போதுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கிறிஸ்டோபர் கூறி இருப்பதாகவும், போதுமான அளவு அதிக ஊதியம் பெறும் பணியாளர்கள் மட்டும் வல்லுநர்களை கொண்டு கூகுளை நிர்வகிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது.

Published by:Selvi M
First published:

Tags: Google, Tamil News