• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • டிரோன் டெலிவரி சேவையில் அமேசானை முந்திய கூகுள்!

டிரோன் டெலிவரி சேவையில் அமேசானை முந்திய கூகுள்!

டிரோன்

டிரோன்

முதற்கட்டமாக 100 வீடுகளுக்கு டிரோன் மூலமாகப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைக் கூகுள் வழங்குகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையில் டிரோன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் சேவையை யார் அறிமுகம் செய்வது என்ற போட்டியில் கூகுள் முந்திக்கொண்டது.

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் முதலில் டிரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்யும் சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2014-ம் ஆண்டு முதலே ஆஸ்திரேலியாவில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டு வந்த கூகுள் 3,000 மருந்து மற்றும் சாக்லேட் டெலிவரிகளை செய்திருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு டிரோன் மூலமாக ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் பொருட்களை டெலிவரி செய்யும் முறையான அனுமதி செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 100 வீடுகளுக்கு டிரோன் மூலமாகப் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையைக் கூகுள் வழங்குகிறது.

மறுபக்கம் சில முக்கிய சாலைகளைக் கடக்க இந்த டிரோன்களுக்கு தடை மற்றும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

டிரோன் சேவை மூலமாகக் கூகுள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 30 முதல் 40 மில்லியன் டாலர் கூடுதல் வாருவாய் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: