கூகுள் Play Movies இனி அனைவருக்கும் இலவசம்..!

அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் யூட்யூப் தளத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் Play Movies இனி அனைவருக்கும் இலவசம்..!
கூகுள்
  • Share this:
கூகுளின் Play Movies சேவை இனி அனைத்துப் பயனாளர்களுக்கும் இலவசமாகவே கிடைக்க உள்ளது.

பல திரைப்படங்கள் நிறைந்து கிடக்கும் கூகுள் Play Movies சேவை விரைவில் இலவசமாக வழங்க கூகுள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் சில கட்டாய விளம்பர இடைவேளைகளையும் அறிமுகப்படுத்தும் திட்டமும் இருக்கிறதாம்.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற OTT தளம் போன்றதுதான் கூகுளின் Play Movies. ஆனால், கூகுள் Play Movies-ல் திரைப்படம் பார்க்க சந்தா ஏதும் செலுத்த வேண்டியது இல்லை. தளத்தில் எளிதாகப் படங்களைப் பயனாளர்கள் வாங்கிக்கொள்ளலாம் அல்லது வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.


தற்போதைய இக்கட்டான கொரோனா சூழல் சரியானதும் கூகுள் தனது புதிய இலவச சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் யூட்யூப் தளத்தில் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தைக் குறைப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க: ஓப்போ பாதி... ஆப்பிள் பாதி... கலவையான தோற்றத்தில் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்!
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்