முகப்பு /செய்தி /வணிகம் / சொமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - இனி ரூ.3 லட்சம் மருத்துவக் காப்பீடு உண்டு!

சொமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - இனி ரூ.3 லட்சம் மருத்துவக் காப்பீடு உண்டு!

சொமேட்டோ மருத்துவ காப்பீடு

சொமேட்டோ மருத்துவ காப்பீடு

கடந்த மாதம் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று கொண்டிருந்தபோது சொமேட்டோ ஊழியர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெருக்கடி மிகுந்த சாலைகளில் நாம் வேலை நிமித்தமாக ஒருமுறை சென்று வருவதே மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. ஆனால், அதே சாலைகளில் அடிக்கடி பயணிப்பதையே முழு நேர தொழிலாக கொண்டுள்ள உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களின் பாதுகாப்பை நினைத்துப் பாருங்கள்?

அது மட்டுமல்லாமல், எல்லோரையும் போலவே பிற வகையிலான மருத்துவ செலவுகள் இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படும் அல்லவா? அதற்காகத் தான் ரூ.3 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது சொமேட்டோ நிறுவனம்.

சொமேட்டோ நிறுவனத்தில் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ள தங்களுடைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த சொமேட்டோ முடிவு செய்திருக்கிறது. தற்போதைய சூழலில் புது டெல்லி, ஹைதராபாத், அஹமதாபாத் ஆகிய இடங்களில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை சொமேட்டோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

Read More : கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுடைய எடையை கவனிக்கவேண்டும்.. ஏன்?

ஏற்கனவே ரூ.10 லட்சத்திற்கு வாழ்நாள் காப்பீடு

டெலிவரி ஊழியர்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சத்திற்கான வாழ்நாள் காப்பீடு திட்டத்தை சொமேட்டோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஊழியர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், இந்தக் காப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து, அவரது இறுதிச்சடங்கு செலவிற்கும் தனியாக பணம் வழங்கப்படுகிறது என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பலர் வேலையின் போது விபத்தில் சிக்குகின்றனர் என்ற செய்திகள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கான வாழ்நாள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்களை சொமேட்டோ செயல்படுத்துகிறது.

அண்மையில் உயிரிழந்த ஊழியர்கள்

கடந்த மாதம் உணவு டெலிவரி செய்வதற்காக சென்று கொண்டிருந்தபோது சொமேட்டோ ஊழியர் விபத்தில் சிக்கி பலியானதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதேபோன்று கடந்த ஜூன் மாதம் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தங்களுக்கான ஊதியம் மற்றும் மிகை ஊதியம் ஆகியவை குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியும், பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை எனக் கூறியும் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை சொமேட்டோ செயல்படுத்துகிறது. காப்பீடு தொடர்பான அனைத்து விவரங்களையும், டெலிவரி ஊழியர்கள் பயன்படுத்தும் ஆப்-களில் அவர்களது தாய்மொழியிலேயே தெரிந்து கொள்ளலாம் என்று சொமேட்டோ தெரிவித்துள்ளது.

ரூ.15.94 கோடி காப்பீடு வழங்கல்

அனைத்து டெலிவரி ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை சொமேட்டோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் வரையிலான ஓராண்டில் 9,210 ஊழியர்களுக்கு ரூ.15.94 கோடிக்கான காப்பீட்டு தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இது தவிர வெளிநோயாளிகள் சிகிச்சைக்கான உதவித்தொகையாக ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

top videos

    இதன்படி இந்த நிதியாண்டில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.2.3 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்று சொமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

    First published:

    Tags: Business, Food Delivery App, Viral, Zomato