முகப்பு /செய்தி /வணிகம் / என்பிஎஸ் திட்டத்தில் புதிய விதிகள்; அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டியவை!

என்பிஎஸ் திட்டத்தில் புதிய விதிகள்; அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டியவை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

என்பிஎஸ் திட்டத்தில் தனிநபர்களும் முதலீடு செய்யலாம்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

என்பிஎஸ் திட்டம் கீழ் வரும் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் புதிய விதிகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வகுத்த புதிய விதிமுறைகளுக்கான அறிவிப்பாணை 2019 மே 8-ம் தேதி வெளியாகியுள்ளது.

படிக்க: என்பிஎஸ் என்றால் என்ன?

பென்ஷன் ஃப்ண்டு தேர்வு:

புதிய என்பிஎஸ் விதிகளின் படி அரசு சந்தாதார்கள் தனியார் துறை ஃபண்டுகளையும் தேர்வு செய்யலாம். முன்பு இது பொதுத் துறை ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றிருந்தது.

ஃபண்டுகளை மாற்றி அமைத்தல்:

என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் அரசு சந்தாதாரர்கள் இனி ஆண்டுக்கு ஒரு முறை தங்களது ஃபண்டுகளை மாற்றி அமைக்கலாம். முன்பு அரசு சந்தாதார்களுக்கு இந்த வசதி இல்லாமல் இருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் என்பிஎஸ் திட்டம் கீழ் முதலீடு செய்பவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை ஃபண்டுகளை மாற்றி அமைக்கலாம்.

முதலீட்டு முறையில் மாற்றங்கள்:

இயல்புநிலை விருப்பத் தேர்வு: பழைய திட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழங்கும் மூன்று பொதுத் துறை ஃபண்டுகளின் முந்தைய செயல்பாட்டை வைத்து முதலீடு மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பான விருப்பத் தேர்வு: நிரந்தர வருமானம் வேண்டும் என எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பான விருப்பத் தேர்வு கீழ் ஃபண்டுகளை தேர்வு செய்யும் போது குறைந்தபட்ச ரிஸ்க் கீழ் 100 சதவீத பங்குகளும் அரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும்.

அதிக வருமான தேர்வு: அதிக வருமானம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஊழியர்கள் கன்சர்வேட்டிவ் முறையைத் தேர்வு செய்தால் குறைந்தது 25 சதவீத நிதி பங்குச்சந்தையிலும், மாடரேட் என்பதைச் செய்தால் 50 சதவீத நிதி பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.

ஐந்து ஆண்டுக் கால பிரேம்:

தற்போது என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வரை இடையில் எடுக்க முடியாது. ஆனால் புதிய விதிகளின் படி 5 வருடத்திற்கு ஒரு முறை இடையில் எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் எப்போது அமலுக்கு வருகிறது?

2019 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய அமலுக்கு வருகிறது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மே 8-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

First published:

Tags: National Pension Scheme