ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கம் அல்லது நிலம் வாங்கும் போது யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா?

தங்கம் அல்லது நிலம் வாங்கும் போது யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

தங்கத்தில் முதலீடு செய்து என்பது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நீங்கள் வரி செலுத்த வேண்டுமா என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  பெரும்பாலான இந்திய குடும்பங்களில் முதலீடு மற்றும் சேமிப்பு என்று வரும் போது, அதிகமாக தேர்வு செய்யப்படுவது தங்கம் மற்றும் நிலம் அல்லது கட்டிடங்கள் வாங்குவது தான். முதலீட்டு தொகை பெரிதாக இருக்கும் போது நிலமாகவோ கட்டிடங்களாகவோ வாங்கும் பழக்கமும், சிறு சேமிப்பு முறையில் அல்லது கொஞ்சம் குறைவான தொகை இருக்கும் போது நகையாக, தங்கமாக வாங்கி சேமிக்கும் பழக்கம் தான் அதிகமாக காணப்படுகிறது.

  தற்போது இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ என்று நவீனமாக கூறப்படும் சொல்லுக்கு இந்திய முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் சிறந்த முதலீடு என்பதை நிரூபித்துள்ளார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே சொந்தமான பயன்பாட்டுக்கு என்பதைத் தவிர்த்து, இந்த இரண்டு சொத்துகளிலும் முதலீடு செய்வது பெரிய லாபத்தை தராது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  read more.. எஸ்பிஐ போலவே PNB கொண்டு வந்திருக்கும் அதிரடி மாற்றம்.. வாடிக்கையாளர்கள் உஷார்!

  எவ்வாறு இருந்தாலும் நிலத்தின் மதிப்பும் தங்கத்தின் மதிப்பும் என்றுமே குறையாது. இது பல ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நிருபிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தியர்கள் தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவே மாட்டார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் தங்கம் வாங்கி விற்பது அல்லது நிலம் வாங்கி விற்பது ஆகிய இரண்டுமே மிகப்பெரிய சொத்துக்களாக கருதப்படுவதால் இந்த இரண்டு முதலீடுகளுக்கும் நீங்கள் வரி செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படும். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நீங்கள் வரி செலுத்த வேண்டுமா என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  தங்கம் மற்றும் நில முதலீடு காப்பிடல் முதலீடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எவ்வளவு காலம் நீங்கள் முதலீடு செய்துள்ளீர்கள் என்ற அடிப்படையில் வரி விதிக்கப்படும்.

  தங்க முதலீட்டுக்கான வரி :

  தங்கத்தில் முதலீடு செய்து என்பது சொந்தப் பயன்பாட்டுக்கான நகைகளைத் தவிர்த்து, (தங்கக் கட்டிகளாக மற்றும் தங்க பாண்டுகளாக) மீதமுள்ள வகைகளைக் குறிக்கின்றது. முதலீடு என்று வரும் போது, தங்கத்தின் விலையேற்றத்தின் போது, அதை ரிடீம் செய்து லாபம் ஈட்டலாம். அவ்வாறு தங்க முதலீடுகளை நீங்கள் விற்பனை செய்தால், பின்வரும் கால அளவுகளில் நீங்கள் வரி செலுத்த வேண்டும்.

  ஷார்ட் டெர்ம் (குறுகிய கால) கேப்பிட்டல் கெயின்ஸ் :

  தங்கத்தில் முதலீடு செய்து 3 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உள்ள வருமான வரி ஸ்லாப் ரேட்டின் அடிப்படையில் வரி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

  இதையும் படிங்க.. உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

  லாங் டெர்ம் (நீண்ட கால) கேப்பிட்டல் கெயின்ஸ் :

  தங்கத்தில் முதலீடு செய்து 3 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால், இண்டெக்ஸ் காஸ்ட் அடிப்படையில் 20.8% என்ற அளவில் வரி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

  ரியல் எஸ்டேட் வரி :

  ரியல் எஸ்டேட் முதலீடு என்பது நிலம், வீடு, கட்டிடம் ஆகிய சொத்துக்களைக் குறிக்கும்.

  ஷார்ட் டெர்ம் (குறுகிய கால) கேப்பிட்டல் கெயின்ஸ் :

  ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து 2 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உள்ள வருமான வரி ஸ்லாப் ரேட்டின் அடிப்படையில் வரி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

  லாங் டெர்ம் (நீண்ட கால) கேப்பிட்டல் கெயின்ஸ் :

  ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து 2 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால், இண்டெக்ஸ் காஸ்ட் அடிப்படையில் 20.8% என்ற அளவில் வரி கணக்கிட்டு செலுத்த வேண்டும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank accounts, Gold, House Tax, Investment