Home /News /business /

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு... இன்றைய (ஆகஸ்டு 2, 2022) நிலவரம்

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு... இன்றைய (ஆகஸ்டு 2, 2022) நிலவரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Gold Rate Today : மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்டு 2, 2022) சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பின்னர் தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது.

    இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிகரான அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதமும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்தது. நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 குறைந்து 38,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.38,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, 4,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Must Read : தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழப்பு - தியாகதுருகத்தில் உறவினர்கள் சாலை மறியல்

    அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, 63.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.63,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி