Home /News /business /

Gold Rate : இன்றும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய (ஜூலை 4, 2022) நிலவரம்

Gold Rate : இன்றும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய (ஜூலை 4, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்றும் (ஜூலை 4) தங்கம் விலை அதிகரித்துள்ளது.

    உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால், இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிகரான அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் 600 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

    அதன்படி, மாதத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ.4,810க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 38,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Must Read : தொடர்பில்லா கார்டுகளை பயன்படுத்துவது நல்லதா? முழு விவரம்

    இதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 64.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 64,000 ரூபாயாக உள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி