ஹோம் /நியூஸ் /வணிகம் /

இன்று தங்கம் வாங்கினால் செம லாபம்.. குறைந்தது தங்கம் வெள்ளி விலை.!

இன்று தங்கம் வாங்கினால் செம லாபம்.. குறைந்தது தங்கம் வெள்ளி விலை.!

தங்கம் விலை குறைவு

தங்கம் விலை குறைவு

விலை ஏற்றம் தொடர்ந்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் ஒரு கிராம் 6,000ஐ தாண்டும் என வல்லுனர்கள் கணித்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.42 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த நிலையே தொடர்ந்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் ஒரு கிராம் 6,000ஐ தாண்டும் என வல்லுனர்கள் கணித்திருந்தனர்.

அதற்கு சான்றளிக்கும் வகையிலேயே இந்த மாதம் ஒரு சவரனுக்கு ரூ 40,840 என்று இருந்த தங்கத்தின் விலை 42 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று விலையில் சற்று இறக்கம் கண்ட தங்கத்தின் விலை, இன்று கிராமிற்கு 34 ரூபாய் குறைந்து ரூ.5190க்கு விற்பனையானது. அதன்படி ஒரு சவரனுக்கு 41,520 ரூபாயாக உள்ளது.

இதேபொல வெள்ளி விலை 1கிராமிற்கு 50 பைசா குறைந்து, 73.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,500 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Gold, Gold Price, Gold rate, Silver