சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் கொண்ட தங்கத்தின் விலை கிராமிற்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 5,345க்கு விற்கப்படுகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42760 க்கு விற்கப்படுகிறது. அதேபோல 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ. 35 குறைந்து, ஒரு சவரண் 45, 656 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு 40 பைசா குறைந்து 74.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 74,600 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.