ஹோம் /நியூஸ் /வணிகம் /

பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை உயருமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை உயருமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்!

தங்கம் விலை

தங்கம் விலை

பண்டிகை நாட்கள் என்றாலே தங்கம் அதிகம் விற்பனையாகும் காலம் என்பதால், டிமாண்டுக்கு ஏற்றவாறு தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பண்டிகை காலம் இந்தியாவில் தொடங்கி விட்ட நிலையில், தங்க விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விசேஷ தினங்களில் தங்கம் வாங்குவது ஒரு வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி மற்றும் அதிகரித்து கொண்டே செல்லும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றால், கடந்த சில காலமாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. ஆனால், பண்டிகை நாட்கள் என்றாலே தங்கம் அதிகம் விற்பனையாகும் காலம் என்பதால், டிமாண்டுக்கு ஏற்றவாறு தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. பண்டிகை காலத்தின் தங்கத்தின் டிமாண்ட் பற்றி நிபுணர்கள் கூறியது பற்றி இங்கே பார்க்கலாம்.

  கடந்த பிப்ரவரி மாதத்தில், 24 காரட், 10 கிராம் எடையுள்ள தங்கத்தின் விலை ரூ.55,000 என்ற நிலையில் இருந்தது. ஆனால், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படையெடுக்கத் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வியாழன் அன்று MCXஇல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.49,300 ஆக சரிந்துள்ளது.

  அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

  கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின், துணைத்தலைவர் மாதவி மேத்தா, இதைப் பற்றி கூறுகையில், “அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வில் தற்போது இறுக்கமான சூழல் இருப்பதால், மற்றும் அவர்கள் நிதி சார்ந்த மிகவும் தீவிரமான கட்டுப்பாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தி வைத்திருப்பது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், சீனாவில் தற்போது நிலவும் பொருளாதார பிரச்சனைகள் வாடிக்கையாளர்களின் தேவையைக் குறைத்துள்ளது. இதைத் தவிர்த்து, ETF முதலீட்டாளர்கள் தங்கள் மாற்று முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்து வருகின்றனர்” என்று கூறினார்.

  மத்திய வங்கிகள் தற்போது நிலவும் இறுக்கமான சூழலை இயல்பாக்கும் வரை, தங்கத்துக்கு அதிக டிமான்ட் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனாலேயே பண்டிகை காலத்தில் விலை சரிந்தே காணப்படும் என்று கூறினார்.

  முக்கியமான திட்டத்தின் வட்டியை திருத்திய ஆக்சிஸ் வங்கி! எல்லாமே மாறுது!

  அமெரிக்க ரிசர்வ் நிதியும் தங்கத்தில் விலை சரிவும் எவ்வாறு தொடர்புள்ளது என்பது பற்றி, ஜியோஜித் நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஹரீஸ் கூறுகையில், “அமெரிக்க ரிசர்வ் நிதி அதிக வட்டியை எதிர்பார்ப்பதால், தங்கம் விலையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், தங்கம் வாங்கும் சூழல் இருப்பதாலும், அடுத்து வரும் பண்டிகை மற்றும் திருமண காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு உயரக்கூடும்” என்று தெரிவித்தார்.

  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.75 சதவிகித புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இந்த புள்ளிகளின் அடிப்படையில், இந்தியாவின் அதிகமாக வாங்கப்படும் உலோகமான தங்கத்தில் விலை சரிந்துள்ளது.

  ஜியோஜித் நிதி சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜத்தீன் திரிவேதி இதைப் பற்றி கூறுகையில், "COMEX தங்கத்தின் விலை $1650க்கு மேல் இருக்கும் வரை, இந்த சூழலில் உலகம் முழுவதுமே உயர்ந்த அளவுக்கு பணவீக்க மேக்ரோ-பொருளாதார சூழ்நிலை உள்ளது. எனவே, தங்கத்தை தற்போது முதலீடாக பார்க்க முடியும்" என்று கூறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Gold, Gold rate, Investment